Ad Widget

யாழ்.பத்திரிசியார் கல்லூரி தொழில்நுட்பக்கூடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்தினை ஜனாதிபதி, நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்துள்ளார்.

இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், கதிரினால், மல்கம் ரஞ்சித், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி மற்றும் பங்குத் தந்தையர்கள், அரச அதிகாரிகள், கன்னியாஸ்திரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts