Ad Widget

வியாபாரிகளுக்கான காலாண்டு வரி அறவிட நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில், வருடம் ஒன்றுக்கு, 12 மில்லியன் ரூபாய் வரையில் வியாபாரத்தை மேற்கொள்ளும் நபர்களின் காலாண்டு வரி அறவிடுதல் தொடர்பான ஆரம்பக் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதிப் பிரதம செயலாளரின் நிதிப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், அப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வரி என்பது மக்களின் தேவைகளை முழுமை செய்யும் நிதி மூலமாகும். வடக்கு மாகாணத்தில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களை மேற்கொள்பவர்கள் வருடாந்த வரி செலுத்துவது அவசியமாகும். ஆனால், இந்த வரி வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட அளவு பணத்துக்கு அமைவாக அறவிடப்பட்டு வருகின்றது. மாகாணத்தின் வருமானத்தை உயர்த்துவதற்கு வரி அறவிடப்படுவது அவசியமாகும்.

“இதனைக் கருத்திற் கொண்டு, வடக்கு மாகாணத்தில் காலாண்டுக்கு ரூபாய் 30 இலட்சத்துக்கு குறைவானதும் ரூபாய் 2 பில்லியனக்கு அதிகரிக்கப்படாதததுமான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளிடமிருந்து வரி அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

“மாகாணத்தில் இவ்வாறு எத்தனை பேர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பது தொடர்பில் தற்போது ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் இதற்கான நியதிச் சட்ட வரைபுகள் தயாரித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts