- Sunday
- May 10th, 2026
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த...
வவுனியாவில் முகமூடி அணிந்த இளைஞர் குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஐந்து பேர் கொண்ட குழு உட்புகுந்து, அங்கிருந்த தாயையும், மகளையும் தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், வீட்டின்...
உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலை வேகமாக குறைந்து வருகிறது. 2018 ஒக்டோபர் 05 முதல் இன்று வரையான கடந்த 21 நாட்களில் ப்ரெண்ட் Brent மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.47 டொலரில் இருந்து 76.77 டொலர் வரையிலும், OPEC Basket மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.09 டொலரில் இருந்து 75.04 டொலர்...
நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த விசேட உரையை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அண்மைய காலமாக இடம்பெற்று வந்த உட்பூசல் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எனினும், அரசியலமைப்பின்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த இலங்கை தவற கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சமகால...
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்துள்ளதாக அரசாங்கம் வர்த்தமானி மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து, சகல அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் இருக்கும்...
இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே...
முதலமைச்சரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள வாராந்த கேள்வி பதில் பகுதி... மணலாற்றுக் காணி அபகரிப்புச் சம்பந்தமான இரண்டாம் கட்டுரை தாமதமாகின்றது. அதற்குப் பதிலாகப் பின்வரும் கேள்வியும் பதிலும் தரப்பட்டுள்ளன. இதுவே எனது முதலமைச்சர் காலத்தில் வழங்கப்படும் கடைசி பதிலாகும். தொடர்ந்து நான் இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் தர வேண்டும் என்று வாசகர்களும் பத்திரிகைகளும் கேட்டால் அவ்வாறு எழுத சித்தமாயுள்ளேன்....
தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்பரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக, நேற்றைய தினம்...
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கமைய கலாசாலையில் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். மலையகத் தோட்ட தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளம் கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு நாட்டின் பல இடங்களிலிருந்து பல்வேறு தரப்பினர்களும் தங்களது ஆதரவுகளை...
யாழ்ப்பாணம், அராலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய பெண்ணும் 80 வயதுடைய ஆணும் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை- அராலி...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பெருங்குற்றங்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், பல விசாரணைகள் நீண்ட காலமாக முடிவின்றி இருப்பதாகவும் கூறியே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த இடமாற்றம், வடமாகாண சிரேஸ்ட பிரதி...
மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் பாக்கியராஜா (வயது – 63) என்பவரே தனது உயிரை மாய்த்தார். தந்தையில் கத்தி வெட்டுக்கு இலக்காகிய அவரது மகன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு...
தமிழ் மக்கள் மாற்று அரசியலை இலகுவாக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் கடந்து காலங்களில் மாற்று அரசியலை மேற்கொண்டவர்கள் உடனடியாக தமிழ் மக்களினால் துாக்கி வீசியெறியப்பட்டமையை வரலாற்றில் காணக்கூடியதாக இருப்பதாகவும் சட்டத்தரணி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசியல் தீர்மானம் தொடர்பில் அறிவிப்பதற்காக நேற்று முன்தினம் (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள்...
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நுகேகொட அநுல வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு...
கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் ஏன் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது என தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இவ்வாறான செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு...
கருணா மற்றும் கே.பி. போன்றவர்கள் அமைச்சு பதவியிலும் அரசின் பாதுகாப்பிலும் இருக்கலாம் என்றால், ஏன் சிறு சிறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யபடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
