- Sunday
- May 10th, 2026
இலங்கையைச் சூழ காணப்படும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் மேகமூட்டமான நிலையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும். மேலும் தாமதித்தால் இலங்கை மீதான சர்வதேசத்தின் மதிப்புக் குறைவடையும்” இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், ஹீதர் நுவேட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் தனது கீச்சகத்தில் தெரிவித்துள்ளதாவது: “நாடாளுமன்றை உடனடியாகக் கூட்டி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு இலங்கை ஜனாதிபதி...
“நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். எனவே இது சிங்களவர்களுக்குரிய நாடுதான். தமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகம் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசி வருகின்றனர். உண்மையில் தமிழ் மக்களுக்கு அடிபடையாக அவை தேவைதானா என கேள்வியெழுப்ப விரும்புகிறேன்” இவ்வாறு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பிபிசியின் சிங்கள சேவை...
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச, சுகாதாரம் சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார். அத்துடன், எஸ்.பி.திசாநாயக்க, பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகப் பதவியேற்றார். பவித்திரா வன்னியாராட்சி, பெற்றோலிய வளங்கள் இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றார்.
வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக இயல்புக்கு மாறான காலநிலை காணப்படுகின்றது. இந் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இன்று அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது....
யாழ்ப்பாண நகரத்தில் சட்டத்துக்கு முரணான வகையில் குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வர்ணகுலசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். யாழ்ப்பாண நகரத்தின் முதன்மை வீதிகளான ஸ்ரான்லி...
வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்தபோதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து...
ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் யாழ் மாவட்ட அரசஅதிபர் கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு பகிரங்கக்...
நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் நேற்று (புதன்கிழமை) கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் இதுதொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ’30 வருடங்கள் துரதிஸ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச...
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம் ஏ.சுமந்திரன்...
முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவும் நானும் முழுமையான அர்ப் பணிப்புடன் செயற்படுவோம் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மைத்திரி – மகிந்த அணி இணைந்து ஏற்பாடு செய்திருந்த மக்கள் பலம் போராட்டம் கொழும்பு நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு...
2019ஆம் ஆண்டு வரும் தீபாவளிக்குள்ளாவது தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தார். கடந்த 2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்டுகளிலும் தீபாவளிக்குள் தீர்வு வரும், வரவேண்டும் என்று சம்பந்தன் தெரித்திருந்த நிலையில் இந்த ஆண்டும் அவர் மைத்தியிடம் இந்தக்...
கிளிநொச்சி ஏ9 வீதியில் நேற்று (செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த எரிபொருள்தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உரியிழந்துள்ளார். மற்றொருவர் வைத்தியசாலைக் கொண்டு சென்ற...
11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டதாக எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அந்த கோரிக்கைகளில் 30 சதவீதம் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிலிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த 11 அம்ச கோரிக்கைகளில் 30 விகிதம்...
வேலுப்பிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை என கூறுபவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளிகள் இல்லை என கூற வேண்டும் அப்படி செய்யாமல் இந்த குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை கூறி சில அரசியல் வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்....
யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்மராட்சி பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியிலிருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் முகாமையாளர் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர். கொள்ளையர்களின்...
ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் கேஷ விதானகே ஆகியோரே சற்றுமுன்னர் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில்...
இன்று (05) இரவில் தென் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது நவம்பர் 6 - 8 காலப்பகுதியில் மேற்கு - வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவுக்கு குறுக்காக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட தொகுதியின் காரணமாக...
Loading posts...
All posts loaded
No more posts
