பொலிஸ் உத்தியோகத்தர் ஏமாற்றிவிட்டார்!!! பொலிஸ் நிலையத்திற்கு முன் இளம்பெண் தற்கொலை முயற்சி!!!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்ற மனவிரக்தியில் இளம்பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றார். அவரைத் தடுத்த பொலிஸார், கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அந்த இளம் பெண்ணை பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில்...

யாழில் போலி லேபலுடன் விற்கப்பட்ட குடிநீர் போத்தல்கள்!!

யாழில் சட்டவிரோதமாக போலி லேபலுடன் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 6 ஆயிரம் குடிநீர் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்தின் மீது நேற்றையதினம் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது குடிநீர்ப்போத்தல்கள் நிறுவன பதிவு இலக்கம்...
Ad Widget

தமிழ்க் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து இனி எவ­ரும் தாவமாட்­டார்­கள் – இரா.சம்­பந்­தன்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவு­வார்­கள் என்று நான் நினைக்­க­வில்லை. அது நடை­ பெ­றாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இந்­தி­ய தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். வியா­ழேந்­தி­ரன் கட்சி தாவி­யமை தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு, அவ­ரைப் பற்றி எமக்கு...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9ஆம் திகதி முதல் இழப்பீடு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும், அதனைத் தொடர்ந்து நண்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், அன்று மாலை யாழ்மாவட்ட...

மைத்திரியின் அரசியல் அழிவு ஆரம்பம்: சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இறுதிக்காலம் ஆரம்பமாகிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக்...

எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் – விசேட வர்த்தமானி வெளியீடு

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அன்றையதினம் முற்பகல் 10 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளை...

அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களைக் கண்டறிவதில் பாரிய சவால்: மாவை

தற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை கூறினார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல்...

கூட்டமைப்புக்கு வியாழேந்திரன் சவால்!

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,...

புதிய பிரதமருக்கு ஆதரவில்லை: சித்தார்த்தன் திட்டவட்டம்

நாட்டின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர் மாற்றமானது அரசியல் ரீதியாக...

இரத்தக்களறி ஏற்படும் அபாயம்!! – ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏஎவ்பிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் இரத்தக்களறியொன்றை தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அதேவேளை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....

ஜனாதிபதி மைத்திரியின் செயல்கள் வன்முறைக்கு வித்திடக்கூடும் – சமந்தா பவர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் உறுதியற்ற வன்முறையை உருவாக்கும் சாத்தியம்...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு சீல்

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து, அதற்கு...

மஹிந்தவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள் என்னை வலியுறுத்தினர்: மனோ கணேசன்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள், என்னை வலியுறுத்தினார்களென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,...

மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்த ஐதேக

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி நேற்றையதினம் சபாநாயகரிடம் கையளித்தது. பிரதமர் வெற்றிடம் காணப்படாத நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் பதவியேற்றமை தொடர்பிலேயே மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியமைக்கான 2094/43இலக்க வர்த்தமானி அறிவிப்பு மற்றும் அமைச்சரவையைக்...

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா? உடனடி விசாரணை நடத்தப்படும் என்கின்றார் நாமல்!

கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என நாடாளுமனற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (48 கோடி இலங்கை ரூபாய்) பேரம் பேசப்பட்டதாக ஐ.தே.க....

வியாழேந்திரனின் கட்சி தாவலிற்கு 48கோடியா? மேலும் மூவர் அரசுடன் இணைய தயார்?

கூட்டமைப்பின் புளொட் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த அரசின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராந்திய அபிவிருத்திக்கான (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சர் எஸ். விஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளநிலையில் அவருடைய கட்சி தாவலிற்கு 48 கோடி கைமாறப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த மேலும்...

யாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று 02.11.2018 மாலை 5 மணியளவில் சபாபதி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பிரிகேடியர் சு.ப....

சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்

சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றத்தின் அதியுயர்தன்மையை உறுதிபடுத்த வேண்டியது கட்டாயமாகும். பழைய பிரதமரை பதவியில் இருந்து...

கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி

பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B. நவீன்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை...

மழையுடனான வானிலை இன்றும் தொடரும்

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் சாத்தியமும் உள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது வடக்கு, வடமத்திய, கிழக்கு,...
Loading posts...

All posts loaded

No more posts