சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் குறைப்பு

சீனி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்கள் மீதான தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சீனி மீதான சிறப்பு வரி 10 ரூபாவாலும் பருப்பு மற்றும் கடலை மீதான தீர்வை 5 ரூபாவாலும் உழுந்து மீதான தீர்வை 25 ரூபாவாலும் கோதுமைத் தானியம் மீதான தீர்வை 3 ரூபாவாலும் குறைக்கப்படுகின்றன.

ரணிலைத் தேடிச் சென்று சந்தித்தார் கோத்தாபய – மைத்திரியுடன் சஜித் பேச்சு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். எனினும் கோத்தாபய – ரணில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தத்...
Ad Widget

மீண்டும் விவசாய பிரதி அமைச்சராக பதவியேற்றார் அங்கஜன்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனுக்கு கடந்த அரசாங்கத்தில் வகித்த விவசாய பிரதி அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன் படி...

எரிபொருளின் விலை அதிரடியாக குறைப்பு!

எரிபொருளின் விலை நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், பெட்ரோலின் விலை 10 ரூபாயாலும், டீசலின் விலை 7 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டர் 155 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக குறைவடைகிறது. அத்துடன் டீசலின் விலை 123 ரூபாயிலிருந்து...

சம்பந்தனை மஹிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தல்!

இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமாறு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அவர் தனது உத்தியோகப்பூர்வ...

எஞ்சிய முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கும் விடுதலை – நாமல் உறுதி!

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானபுதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளிப்பதுடன் முன்னாள் போராளிகளுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த...

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்- பொ. ஐங்கரநேசன்

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்றுஇ வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும்...

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர் – பெண் சட்டத்தரணி

“யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்” இவ்வாறு யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துத்துரைத்தார் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன். யாழ்ப்பாணம் – கொக்குவில் தொடருந்து நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான சிறியரக வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்...

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக வித்தியாதரனை தெரிவு செய்ய மகிந்த முடிவு?

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக தமிழரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக மஹிந்தவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து அறிய முடிகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசனுடைய நெருங்கிய சகாவான சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வட...

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தினை யாழ்.பல்கலை வளாகத்தில்...

பாராளுமன்றம் நவம்பர் 5 ஆம் திகதி கூட்டப்படும் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

பாராளுமன்றத்தை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைகழக பேராசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சாதாரணமாக 5 ஆம் திகதி கூடப்படும் பாராளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையான 11 நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்...

இறக்குமதியாகும் பெரிய வெங்காயம், உருளைக்கிழங்குக்கு வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு மீதான சிறப்புச் சந்தைத் தீர்வை கிலோ ஒன்றுக்கு 40 வீத்த்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு இன்று (1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. உள்ளூர் விவசாயிகளின் நன்மை கருதியே இந்த தீர்வை அதிகரிப்பு செய்யப்பட்டதாக நிதி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய முன்னாள் வெளியுறவு செயலாளர்களுடன் சம்பந்தன் பேச்சு

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் இச்சந்திப்பு...

மஹிந்தவிற்கே பிரதமர் ஆசனம்!- சபாநாயகர் உறுதி

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இடையூறாக விளங்கமாட்டார் என்றும் சபாநாயகர் அலுவலக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில்...

இணைந்த வடகிழக்கில் சமஷ்டித் தீர்வு நான் உயிருடன் இருக்கும்வரை இல்லை – மைத்திரி ஆவேசம்

“நான் இந்தக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கை இணைக்கவிடமாட்டேன். சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன். இவற்றைச் செய்யவேண்டுமாயின் என்னைக் கொல்லவேண்டும்” இவ்வாறு கடும்தொனியில் தெரிவித்தார் மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தத் தகவலை லங்கா தீப இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்த...

ரயில் விபத்தில் யாழ்.பல்கலை மாணவன் சாவு

தெல்லிப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தொடருந்து விபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (வயது 22) என்பவரே உயிரிழந்தார்.

3 சூறாவளிகள் இலங்கைக்கு அருகே உருவாகின – வடக்கில் மழை நீடிக்கும்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று சூறாவளிகள் இலங்கையைத் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். இலங்கைக்குக்கு தென்கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் உருவாகியுள்ள இந்த சூறாவளிகள் வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையைத் தாக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில்100 மில்லிமீற்றர்...

பிரச்சினைகள் தொடர்பாக முறையிடுங்கள்!! தீர்த்து வைக்கத் தயார்!! : டக்ளஸ் தேவானந்தா

எந்தவொரு வேளையிலும் பிரச்சினைகளை முன்வைக்க தன்னிடம் வரலாம் என்றும் அவற்றைத் தீர்த்து வைக்கத் தயார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சில் நேற்று (புதன்கிழமை) கடமைகளை ஆரம்பித்தார். தனது கடமைகளைப் பெறுப்பேற்ற பின்னர் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ்...

கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் தமிழர் நலன்களை அழிக்கும்: கஜேந்திரகுமார்

நாட்டின் பிரதமரை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முன்வைத்துள்ள இரு நிபந்தனைகளும் தமிழ் மக்களின் நலன்களை அழிக்கும் நிபந்தனைகள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில்...

ரணில் மீண்டும் பதவியேற்றால் அதிகாரத்தில் இருக்கப்போவதில்லை: மைத்திரி சூளுரை

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த...
Loading posts...

All posts loaded

No more posts