Ad Widget

மீண்டும் விவசாய பிரதி அமைச்சராக பதவியேற்றார் அங்கஜன்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனுக்கு கடந்த அரசாங்கத்தில் வகித்த விவசாய பிரதி அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன் படி அங்கஜன் இராமநாதனனுக்கு கடந்த அரசாங்கத்தில் வகித்த விவசாய பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

  • மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் – காதர் மஸ்தான்
  • துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் – நிஷாந்த முதுஹெட்டிகமகே
  • நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் – சாரதி துஷ்மந்த
  • வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் -இண்டிகா பண்டாரநாயக்க
  • தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் -மனுஷ நாணயக்கார
  • விவசாயம் பிரதி அமைச்சர் – அங்கஜன் இராமநாதன்
  • மாகாண சபை, உள்ளூராட்சி, மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சர் – ஸ்ரீயானி விஜயவிக்ரம
  • கல்வி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் – மோகன் லால் கிரேரோ
  • நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக – M. L. A. M.ஹிஸ்புல்லா
  • பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – லக்ஷ்மன் செனவிரட்ன
  • இளைஞர், மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் – பியசேன கமகே
  • திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சித் துறை அமைச்சர் – தயாசிறி ஜயசேகர
  • துமிந்த திஸாநாயக்கவிற்கு மீண்டும் நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அலுவல்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

Related Posts