புதிய அமைச்சரவை இன்று நியமனம்?

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் கடந்த ஆறு வாரமாக நீடித்த நெருக்கடி நிலைமை நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுக்கமான தீர்மானத்திலிருந்து விலகி, நாடாளுமன்றின் பெரும்பான்மைக்கு இணங்க ரணில்...

வீதியைக் கடக்க முயன்றவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை வேக­மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­துள்ளதாக யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித­த­னர். யாழ்ப்­பா­ண நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்த முச்­சக்­க­ர­வண்­டிச் சார­தி­யான தன­பால் (வயது-45) என்­ப­வரே இவ்வாறு உயி­ரி­ழந்­துள­ளார். இந்நிலையில். இது தொடர்­பில் பொலி­ஸார் தெரி­விக்கையில், யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் முச்­சக்­க­ர­வண்­டியை நிறுத்­தி­விட்டு...
Ad Widget

புதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகினார் மஹிந்த!

புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து பதவி விலகலுக்கான ஆவணத்தில் மஹிந்த கையெழுத்திட்டுள்ளார். புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து தனது பதவியிலிருந்து விலகியதாக, இதனை தொடர்ந்து இடம்பெற்ற...

மஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் எனவும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கு த.தே.கூ ஏன் நீதிமன்றம் செல்லவில்லை?

நாட்டில் ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக எனக்கூறி நீதிமன்றம் சென்று நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக தம்பட்டம் அடிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற போது அதனைத் தீர்ப்பதற்கு ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஐனநாயகத்தை...

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை

புதிய அமைச்சரவையை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல்...

பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா...

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சிங்கள குடியேற்றம் தொடர்பில் அந்தந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்களிடம் தொடர்ந்தும்...

கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களுக்கு பயனற்றது என்கிறார் கஜேந்திரன்

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கூட்டமைப்பு, ரணிலுக்கு வழங்கிய ஆதரவு...

ரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்: சுரேஸ்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்க தூதுவர், இந்திய...

மர்ம காய்ச்சலால் யாழ்.மாணவன் உயிரிழப்பு

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவனொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) என்ற மாணவன் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...

பேத்தை அபாயம் இலங்கைக்கு நீங்கியது!

“வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திராவை நோக்கி நகர்துள்ளது. அது அடுத்த 24 நான்கு மணித்தியாலயங்களில் ஆந்திராவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் புயலுக்கு பேத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத்...

நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து நடக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம்...

மூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா

நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகமிழைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு ஓரிரு நாட்களில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பார் என்றும் அவர் கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம்...

சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – சுமந்திரன்

சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது என்பதை இன்றைய தீர்ப்பானது எடுத்து காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பான தீர்ப்புக்கு ஆஜராகியிருந்த அவர் தனியார் செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....

ரணிலுடன் இணைந்து செயற்பட தயார் இல்லை – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் இணைந்து செயற்படத் தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி...

ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முரணானது என உயர் நீதிமன்ற தீர்ப்பு – முழுமையான விபரங்கள் இதோ!

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த மனுக்கள்...

யாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.கலைத்தூது கலையரங்கில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,...

தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!- அரியாலையில் வீடும் வாகனமும் பலத்த சேதம்

யாழ்ப்பாணம் அரியாலையில் முகமூடி அணிந்த மர்ம வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தினால் அப்பகுதியின் வீடொன்றும், காரொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளன. வங்கி முகாமையாளர் ஒருவரின் வீடே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை...

மீனவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து டிசம்பர் 15ஆம் திகதி வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்இ மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts