கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களுக்கு பயனற்றது என்கிறார் கஜேந்திரன்

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கூட்டமைப்பு, ரணிலுக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இந்திய, மேற்கு நாடுகளின் நலன்களை கருத்திற் கொண்டு கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், அதிகாரப் போட்டியில் தமிழ்த் தரப்புக்கள் பேரம் பேச வேண்டிய இடத்தில் பேரம் பேசாமல் வெறுமனே ஆதரவை வழங்கி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Posts