Ad Widget

பேத்தை அபாயம் இலங்கைக்கு நீங்கியது!

“வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திராவை நோக்கி நகர்துள்ளது. அது அடுத்த 24 நான்கு மணித்தியாலயங்களில் ஆந்திராவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப் புயலுக்கு பேத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை இது புயலாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திருகோணமலையிலிருந்து 850 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. முதலில் வட தமிழகம் – ஆந்திரா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Posts