- Saturday
- May 9th, 2026
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா.சம்பந்தன், சட்டத்திற்கும் நீதிக்கும் முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நள்ளிரவு முதல் லீட்டருக்கு 2 ரூபாயாக குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் நேற்று மாலை கூடியது. எரிபொருள் விலை நிர்ணயத்தின் கீழ் மாதத்தின் ஒவ்வொரு 10 ஆவது நாளிலும் எரிபொருள்...
இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி முல்லைத்தீவு மக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அலம்பிலில் நில அளவீட்டிற்கு சென்ற அதிகாரிகள் பிரதேச மக்களின் எதிர்ப்பினையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் தனியார் காணியில், ஒரு பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ளதுடன், காணியின் மற்றுமொரு பகுதியில் இராணுவ முகாம் காணப்படுகின்றது. இந்நிலையில், குறித்த காணியை இராணுவத்திற்கு...
போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை விநியோகிக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு தென்மராட்சி பகுதியில் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று புதன்கிழமை மாலை (09.01.19) போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை யாழ்ப்பாண பகுதியில் விநியோகிப்பதற்கு ஒப்பந்தம் பேசப்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி...
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவப்பிரகாசம் சிவசீலன் (32) என்ற அரசியல் கைதியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய வழக்கு தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அக்கறையின்மை அவருடைய விடுதலையைத் தாமதிக்கச் செய்துள்ளதாகத்...
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் ஆண்டின் முதல் வாரத்திலையே 40 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டெங்கு நுளம்பை கட்டுபடுத்தும் செயற்பாடுகள் , விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னேடுக்கப்பட்டுவருவதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை...
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா என கேள்வியெழுந்துள்ள நிலையில் அதனை ஆராய்வதற்கு புதிய விசாரணைக்குழுவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார். கிளிநொச்சியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் கள நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த...
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா,...
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில், வெள்ள அனர்த்த சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 10 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த கலந்துரையாடலின் போது, கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், கிளிநொச்சி...
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்தார்.. கைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அங்குள்ள முதியவர்கள் வரவேற்றனர். அவர்களுடனும் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்ட ஆளுநர், அவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கினார்.
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் பிரதான அதிகாரியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படார். இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று மனித உரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்டு வருபவராவார். 2017ஆம் ஆண்டு கஜபா படைப்பிரிவின் தலைமை...
மன்னார் மனித புதைகுழியைப் போன்று யாழ்ப்பாணத்திலும் மனித புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணம் மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள கிணற்றிலும், செம்பாட்டுபிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் இராணுவத்தினரால் இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டு கிணறுகளில் போடப்பட்டதாகவும், அவற்றை தோண்டியெடுக்க...
இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தினர் இரசாயன மற்றும் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. எனவே இராணுவம் இறுதிப் போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டம் மீதான...
இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த முல்லைத்தீவை சேர்ந்த சண்முகநாதன் விஜயலட்சுமி என்ற தாயார் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர்...
நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல் வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தாகும். புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
பிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்தோம் என முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது. வழக்கின் எதிரிகளில் ஒருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன்...
வடமாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13,606 பேர்கள் டெங்கு நுளம்பினால் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நுளம்பின் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி எச்.என்.கசித்த டீ. சில்வா தெரிவித்தார். வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பருவகால மழைவீழ்ச்சி காரணமாக டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (08) வடமாகாண சபையின்...
வவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் தப்பிச் சென்ற நபர், இந்தியாவுக்கு தப்பியோடி விட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் மூலம், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கிடைத்த தகவல்களை...
வடக்கு மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்படுகிறதோ, அன்றே முழுமையான மகிழ்ச்சியடைவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி பதவியேற்று 4 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு, லக்கலையில் நேற்று பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்- ”நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக நியமித்து...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட சுரேன் ராகவன் இன்று (புதன்கிழமை) கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை பத்து மணியளவில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் ஆளுனராக கடமையாற்றிய ரெஜினோல்ட்...
Loading posts...
All posts loaded
No more posts
