யாழ்.மாநகர சபை எல்லைக்குள் ஆண்டின் முதல் வாரத்திலையே 40 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டெங்கு நுளம்பை கட்டுபடுத்தும் செயற்பாடுகள் , விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னேடுக்கப்பட்டுவருவதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை எல்லைக்குள் 569 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதில் நவம்பர் மாதம் 40 பேரும் , டிசம்பர் மாதம் 173 பேரும் பாதிக்கபட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு 905 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். இதைனை ஒப்பிடும் போது கடந்த வருடம் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளானோர் குறைவடைந்திருந்தனர்.