சவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

சவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பணிப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பல இன்னல்களை எதிர்கொண்டு அதற்கான இறுதி தீர்வுகளை பெற்ற பெண்கள் வௌியேறுவதற்கான அனுமதி கிடைக்கும் வரை இங்கு தங்கியுள்ளனர். இதன்படி 21 பெண்கள் சவுதியை விட்டு வௌியேறுவதற்கான விமான பயணச் சீட்டுகள்...

பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்கியவருக்கு விளக்கமறியல்!

மனைவியின் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் தெற்கை சேர்ந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் தனது மாமனாருக்கு (மனைவியின் தந்தை) அடித்து அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார். அதனால் காயங்களுக்கு இலக்கானவர் தாக்குதலாளியிடமிருந்து, தப்பித்து கோப்பாய் காவல்...
Ad Widget

ஆயிரத்து ஐநூறு பேருக்கு ஆசிரியர் நியமனம்: இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

எதிர்வரும் மாதங்களில் 1500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் பாதணிகள் என்பன கல்வி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை தாங்கி...

பிரித்தானியாவில் பட்டம் பெற்றார் இலங்கையின் முதல் பெண் இராணுவ வீராங்கனை

பிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் இராணுவ வீராங்கனை முதல் தடவையாக பட்டம் பெற்றுள்ளனர். பிரித்தானியாவின் செட்டர்ரிக் பகுதியில் உள்ள இராணுவ பல்கலைக்கழத்திலேயே இலங்கை விமானப்படையினைச் சேர்ந்த லெப்டினன்ட் அட்டேல் கோப்ரல் அமரசேன என்ற இராணுவ வீராங்கனையே இவ்வாறு பட்டம் பெற்றுள்ளார். இவ்வாறு முதல்தடவையாக பிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற லெப்டினன்ட் அட்டேல்...

பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது

வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் கைது செய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவி மீது பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த மாணவி படுகாயமடைந்தார். இந்நிலையில், காயமடைந்த...

வவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு!

வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார். ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கொழும்பு, மருதானையை சேர்ந்த 41 வயதுடைய கேசவன் சசிகுமார் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்...

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியாகவே அமையும்: தவராசா

புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தின்படி புதிய அரசியலமைப்பானது ஒற்றையாட்சியாகவே அமையப் போகின்றது என முன்னாள் வட.மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க...

கூட்டமைப்பின் நடவடிக்கைகள் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றன: கெஹலிய

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒக்டோபர் 26...

மாணவி மீது அதிபர் தாக்குதல் – நீதி கோருகிறார் தந்தை!

வவுனியா ஓமந்தையில் பாடசாலை மாணவி ஒருவர் அதிபரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதென்றும், ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் தனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா...

மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை – பாடசாலை அதிபர் கடிதம்

வவுனியா – ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை என ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அதிபர் கெ.தனபாலசிங்கம், கொழும்பிலுள்ள மதுவரி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்படி, அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம்...

பொலிஸில் தஞ்சமடைந்த மாமனை அங்கு புகுந்து தாக்கிய மருமகன்!!

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குள் தஞ்சமடைந்த மனைவியின் தந்தை மீது அங்கு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட இளம் குடும்பத்தலைவரை பாதுகாக்கும் வகையில் அவரைத் தப்பிக்கவிட்ட பொலிஸாரின் நடவடிக்கை இடம்பெற்றது. எனினும் அது தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு முறைப்பாட்டாளரின் உறவினர்கள் கொண்டு சென்றதை அடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர். தாக்குதலாளியின் வீடு கோப்பாய் பொலிஸ்...

தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞன் கைது!

கோப்பாய் பொலிஸில் தனக்கு செல்வாக்கு உள்ளது என தெனாவட்டாகப் பேசிய இளைஞனை கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றசாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] உரும்பிராய் சந்தி பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை இரவு கடமையில் நின்றுள்ளார்கள். அதன் போது உரும்பிராய் சந்தியில்...

வடக்கில் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது – இராணுவம்

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் பொது மக்களிடம்...

புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் : முன்னாள் போராளிகள்

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;...

லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக தமிழர் ஒருவர் ஜேர்மனியில் கைது!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தமிழர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] 2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள 39...

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டை யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ். பொலிஸாரால் இரண்டு தடவைகளுக்கு மேல் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் முதல்வர் இமானுவேல் ஆனல்ட் விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறியிருந்த நிலையில் இந்த அழைப்பாணையை நீதிமன்றம் ஊடாக பொலிஸார் அனுப்பிவைத்தனர். யாழ்ப்பாண மாநகர சபைக்கு...

வடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே!! – விஜயகலா

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜேயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டக்கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த சட்டக்கல்வி மூலம் மாணவர்களில்...

எதிர்க்கட்சித் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கிறார் மஹிந்த!

புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்....

இரணைமடுக் குளத்தின்மீது அரசின் கழுகுப்பார்வை விழிப்பாக இல்லாவிடில் குளம் பறிபோகும் அபாயம் -பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

இரணைமடுக்குளம் மீண்டும் எல்லோரினதும் பேசுபொருளாக ஆகியுள்ளது. கொழும்பு அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியிலும் நேரமொதுக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கிளிநொச்சி வந்து இரணைமடுவின் வான்கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார். வெள்ள அனர்த்தங்களைப் பார்வையிடவந்த நீர்ப்பாசன அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இவ்வளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகும் யாழ்ப்பாண மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் இனிமேலும் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தைக்...

யாழில் உண்ணிக் காய்ச்சல் அபாயம்; பெண் உயிரிழப்பு!

உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய காய்ச்சல் ஒன்று யாழ்ப்பாணத்தில் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உரும்பிராயை சேர்ந்த 45 வயதான, இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 30ம் திகதி கிளிநொச்சி, இரணைமடுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த...
Loading posts...

All posts loaded

No more posts