பிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண் இராணுவ வீராங்கனை முதல் தடவையாக பட்டம் பெற்றுள்ளனர்.

பிரித்தானியாவின் செட்டர்ரிக் பகுதியில் உள்ள இராணுவ பல்கலைக்கழத்திலேயே இலங்கை விமானப்படையினைச் சேர்ந்த லெப்டினன்ட் அட்டேல் கோப்ரல் அமரசேன என்ற இராணுவ வீராங்கனையே இவ்வாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவ்வாறு முதல்தடவையாக பிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற லெப்டினன்ட் அட்டேல் கோப்ரல் அமரசேன, இலங்கையிலுள்ள விமானப்படை வீரர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“இவர் மிகவும் திறமையானவர். மிக இலகுவாக விடயங்களை கற்றுக்கொண்டார். அவருக்கு பயிற்சியளித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. இவர் தன்னைப் போன்று பலரை உருவாக்குவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது“ என லெப்டினன்ட் அட்டேல் கோப்ரல் அமரசேனவிற்கு பயிற்சியளித்த பிரித்தானிய இராணுவ பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் செட்டர்ரிக் பகுதியில் உள்ள இராணுவ பல்கலைக்கழத்தில் ஆண்டுதோறும் பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.