- Saturday
- May 9th, 2026
தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல மாறாக, ஜெனீவா பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளென வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வாரமொரு கேள்விக்கு பதிலளித்துவரும் அவர், பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும், ஏக்கிய இராஜ்ய பதம்கொண்ட புதிய அரசியல் அமைப்பின் வரைவு குறித்து இந்த வாரம் பதிலளிக்கும்போதே...
வலி.வடக்கில் வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று, வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டதுடன், வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு...
வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த, அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி...
வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 39 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தையிட்டி மற்றும் ஒட்டகப்புலம் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த காணிகளே மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் விடுவிப்புக்கான அறிவிப்பினை நேற்று முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார். அதன்படி நேற்று வலி.வடக்கு,...
முல்லைத்தீவு, நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இராணுவ வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (21) மதியம் 1 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும், கேப்ரால் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெறுவது தமிழர்களாகிய எமக்கு மதிப்பான விடயமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) முற்பகல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...
யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) தமது காணிகளுக்குச் செல்ல வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். வடக்கில் 1000 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை நேற்றையதினம் மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால...
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து லண்டன் தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி...
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது...
பாரிய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்கள் இருந்தால், அதனை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ புலம்பெயர் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலநேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த நாட்டில் நிறைய பேர் இராணுவம் என்பதை தவறான...
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாகன தொடரணி முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கோடலிக்கல்லு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார். இந்நிலையில் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். இராணுவத்...
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் 1201 ஏக்கர் காணிகள் இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றுக்குள் புகுந்த குழு ஒன்று கடையின் உரிமையாளர், உரிமையாளரின் மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு, பொலிஸாருடைய பிடியில் இருந்து லாவகமாக தப்பி சென்றிருக்கின்றது. நேற்று முன்தின்ம் மாலை 6 மணியளவில் யாழ்.பிரதான வீதியில் நகை கடை ஒன்றில் நகை செய்ய கொடுத்த வாடிக்கையாளர்கள் சிலர் கடைக்கு வந்துள்ளனர்....
கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்த குறித்த நபர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் எண்ணம் எமக்கில்லை என தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண மத்திய குழுக் கூட்டம், யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு எந்தவொரு...
புதிய அரசியலமைப்பு குறித்து ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொறுப்புக்கூறல் விடயத்திற்கு மேலதிகமாக, புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை இணைத்து அதற்கான சர்வதேச மேற்பார்வை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜெனீவா அமர்வில் கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிக்கும் விடயங்களை...
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியில் கிணறு அமைக்க வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் விநியோகத்தின்போது லஞ்சம் பெற்ற பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் கையும்களவுமாக கைது செய்யப்பட்டார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] பூநகரிப் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தான பெண் உத்தியோகத்தர்...
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (18) முற்பகல் இரணைமடு நீர்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது, இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான செயற்திட்ட முன்மொழிவை தன்னிடம் சமர்ப்பிக்கும்படி, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்என்.சுதாகரனிற்கு உத்தரவிட்டுள்ளார். இது...
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (வளிமண்டலவியல் திணைக்களம்)
வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வௌ்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
