Ad Widget

லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக தமிழர் ஒருவர் ஜேர்மனியில் கைது!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தமிழர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Business crime

2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள 39 வயதுடைய நவநீதன் என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையின் பின்னர் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் தொடர்பான விவரங்களை தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிடாத ஜேர்மன் பொலிஸார், வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர் என்றும் கொலை மற்றும் கொலை எத்தனிப்புச் சம்பவங்களுடனும் அவர் தொடர்புடையவர் எனவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு குறித்த நபர் மீது 2005 ஓகஸ்ட் இல் வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் கொலையுடன் சம்பந்தப்பட்டமை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சி செய்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Posts