தேர்தலை நடத்தாவிடின் இராஜினாமா செய்வேன் – மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை!

மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை என்றால் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அந்தவகையில் எதிர்வரும் நவம்பர்10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்றும் இல்லையெனில் தான்...

யாழ் நகருக்கு அண்மையாக 300 பரப்பு காணி சுவீகரிப்பு: பொதுமக்கள் கொந்தளிப்பு!

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் காணி சுவீகரிப்புக்காக முன்னெடுக்கப்பட்ட அளவீட்டுப் பணிகள் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில், 300 பரப்புக் காணியை அரசுக்கு சுவீகரிப்பதற்காக, நில அளவீட்டுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்படவிருந்தன. இந்நிலையில், காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சுவீகரிக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் மீறி சுவீகரித்தால், சாகும் வரையான உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து...
Ad Widget

யாழ்-கொழும்பு அதிசொகுசு பஸ் உரிமையாளருக்கு சிறை மற்றும் ரூபா ஒரு லட்சம்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அதிசொகுசு பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் தீர்ப்பளித்தார். பேருந்து உரிமையாளரின் சிறைத் தண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதிமன்று ஒரு லட்சம் ரூபா தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டது....

யாழ்.நகர உணவகத்தில் வாங்கிய உணவுப் பார்சலில் மட்டத்தேள்!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள உணவகத்தில் வாங்கிய மதிய உணவுப் பொதியில் மட்டத்தேள் காணப்பட்டதாக வாடிக்கையாளர் ஒருவர் மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருகில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வழமை போன்று நேற்று(25) மதிய உணவு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பின்னர் தான் வேலை செய்யும் வங்கிக்கு சென்று...

நாட்டைப் பிரிக்கும் எண்ணம் யாழ்ப்பாண மக்களிடம் இல்லை – அஸ்கிரிய பீட மகாநாயக்கர் தெரிவிப்பு

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு நாட்டைப் பிரிக்கும் எண்ணம் இல்லை என்று அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரக்காகொட ஞானரத்ன தேரர் தெரிவித்தார். “நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அங்குள்ள மக்கள் இலங்கைக்குள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றே கோரினார்கள். நாட்டைப் பிரிக்கும் எண்ணம் தமக்கில்லை என அவர்கள் குறிப்பிட்டனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பைவிட நாட்டு மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு...

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது – டக்ளஸ்

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மாகாண சபை முறைமையை எமது மக்கள் நலன் கருதிய முறைமையாக செயற்படுத்த வேண்டும் என்கின்ற விருப்பமும் தேவையும் மக்களுக்கு இருக்கின்றதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு...

வவுனியாவில் முச்சக்கர வண்டி எரிப்பு!

வவுனியா, ஓமந்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. ஓமந்தை, மருதங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு இனந்தெரியாதவர்களால் குறித்த முச்சக்கர வண்டி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. குறித்த முச்சக்கர வண்டியினை ஓமந்தை பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் வழிமறித்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதன்போது முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கர...

இந்த ஆண்டுக்குள் வடக்கு கிழக்கில் 17 ஆயிரம் வீடுகள் அமைக்கத் தீர்மானம்

இந்த ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு அமைத்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பநேற்று (வெள்ளிக்கிழமை) நடத்திய விசேட பேச்சுவார்த்தையின் முடிவில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவரின் செயலாளர் மற்றும்...

யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம் – சர்வதேச மன்னிப்புச்சபை

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது. தெற்காசியப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பாக இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் வாக்குறுதி வழங்கியவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டினை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய...

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களமே மர்மமாக இருப்பதாக ஆசிரியர் சங்கம் கவலை!!

வடமாகாண கல்வித்துறையில் மர்மங்கள் நீடிக்கின்றன. பணிப்பாளர்கள் இல்லை!! அதிபர்கள் இல்லை!! ஆசிரியர்கள் இல்லை!! இதுவே இன்றைய வடமாகாண கல்வியின் நிலை என்று கவலை வெளியிட்டுள்ளது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதானமான யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் வெற்றிடம் ஒரு வருடத்தை...

யாழில் கர்ப்பிணியின் மீது மண்வெட்டி பிடியினால் தாக்குதல்!!

சாவகச்சேரியில், நிறைமாதக் கர்ப்பிணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை குறித்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. அது குறித்து தெரியவருவதாவது, தாக்குதலுக்கு இலக்கான பெண்ணும், தாக்குதல் நடத்தியவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், குறித்த பெண் கர்ப்பம் அடைந்த நிலையில் அந்த பெண்ணை...

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கூட்டமைப்பிற்கு சபாநாயகர் விளக்கம்!

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காண முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....

யாழில் வழிப்பறி கொள்ளை சந்தேகநபர் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் வழிப்பறிகளும் நகைத் திருட்டுக்களும் இடம்பெற்று வந்தநிலையில் அவை தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில்...

நாயாற்றில் புத்தர் சிலை அமைத்தமை தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயல் – சி.தவராசா

நாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்து நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட செயலானது தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயலாகும் என முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். காலம் காலமாகத் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய நீராவியடிப் பிள்ளையார் கோயிலின் வளவிற்குள் இந்தப் புத்தர் சிலை அமைத்தமையானது...

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட புதிய நடைமுறை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்களைப் பார்வையிட இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கான புதிய அனுமதியட்டை நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். இந்த நடைமுறை தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நோயாளர்கள், பார்வையாளர்கள், வைத்தியர்கள் மற்றும்...

தமிழர்களுக்கான உரிமைகளைக் கொடுத்த பின்னரே மத்திய அரசுடன் இணைவு – சி.வி

தமிழர்களுக்கான முழுமையான உரிமைகளை அரசாங்கம் கொடுத்த பின்னரே மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முடியும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் தெற்காசியத் திணைக்களத் தலைவரும், இந்திய ஒருங்கிணைப்பாளருமான ஃபேர்கஸ் அவுல்ட் நேற்று (வியாழக்கிழமை) வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பின் போதே இது குறித்து தெளிவுபடுத்தியதாக விக்னேஷ்வரன் அனுப்பி வைத்துள்ள...

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சேனா படைப்புழுவின் தாக்கம்

நாடாளாவிய ரீதியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சேனா படைப்புழுவின் தாக்கம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயிர் வகைகளில் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களம்தின் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் இன்று இடம்பெற்ற விடியும்வேளையில் கலந்து கொண்ட அவர் ,சேனா படைப்புழு கடந்த...

மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய புதல்வரின் திருமண நிகழ்வில் பிரதமர் ரணில்!

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரான ரோஹித ராஜபக்ஷவுக்கு இன்று (24) திருமண பந்தத்தில் இணைந்தார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களில் மூன்றாமவரான ரோஹித்த ராஜபக்‌ஷவுக்கும் டட்யனா லீ ஜயரத்னவுக்கும் (Tatyana Lee Jayaratne) இடையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் சொந்த ஊரான தங்காலை வீரகெட்டியவில் இடம்பெற்ற இவ்வைபவம், இறுதி வரை மிக...

பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா?

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு அரசு 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது. பிராந்திய விமான நிலையங்களுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கான விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கான முதல் நடவடிக்கையாகவே, விமான ஓடுபாதையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. வடக்கு அபிவிருத்தி அமைச்சு, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவுள்ளது. போர்க்காலத்தில் இராணுவத்...

யாழில் உயிர்கொல்லும் விஷச் சாராம் 372 பரல்கள் பிடிபட்டது!!

மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கதக்கதான எதனோல் போதை அமிலம் 372 எண்ணை பரல்களுக்குள் யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 21 லீட்டர் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளில் அது மரக்கறி எண்ணெய் போன்று கடத்தப்பட்டுள்ளது. அதன் மொத்த அளவு 7812 லீட்டர் என கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகாலை விசேட அதிரடி படையினர் சுன்னாகம் பகுதியில் பாரவூர்தி...
Loading posts...

All posts loaded

No more posts