சிறுமி பாலியல் வன்புணர்வு சம்பவம், சமூகத்தை அச்சுறுத்தும் பாரதூரமான குற்றம் – யாழ். நீதவான்

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம் என்றும் அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம் என்றும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் சுட்டிக்காட்டினார். அத்தோடு சந்தேகநபரின் பிணை மனுவையையும் நிராகரித்த நீதவான் குறித்த நபரின் விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டுள்ளார். கொக்குவில் பகுதியில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று...

வவுனியாவில் மக்களை பெருமளவில் கலந்துகொள்ளுமாறு விக்கி அழைப்பு!

வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற இருக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள...
Ad Widget

கால்வலிக்க நிறுத்தப்பட்ட அரச உத்தியோகஸ்தர்கள்!

யாழில் உள்ள அதிகாரம் மிக்க அரச அலுவலகம் ஒன்றில் சீற்றூழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகஸ்தர்கள் மூவரை வெய்யிலில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் மேலிடத்திற்கு முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், குறித்த அதிகாரம் மிக்க அலுவலகத்தில் பணிபுரியும் 3 பெண்...

நெடுங்கேணிப் பகுதியில் காடழிக்கப்பட்டு புத்தர்சிலை அமைப்பு – மக்கள் விசனம்!

வவுனியா வடக்கு – ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தர்சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நெடுங்கேணி பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனர். இது குறித்து நெடுங்கேணி...

சவேந்திர சில்வாவை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்த வேண்டும்: ஜஸ்மின் சூக்கா

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் அமைப்பினால்நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக...

தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலைக்கழக மாணவியின் சடலம் கண்டெடுப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. சிறீதரன் கோகிலமதி (வயது 22) என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக...

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – பதற்றமான நிலையினைத் தொடர்ந்து பொலிஸார் குவிப்பு!

திருகோணமலை – கிண்ணியா, கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மூவர் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கு வந்த கடற்படை வீரர் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த நிலையில் அவர்களில் இருவர் கடலில் பாய்ந்துள்ளதாக...

கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

வனவளத் திணைக்களத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் மனித உரிமை...

உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டண விபரம்

கொழும்பு- யாழ்ப்பாணம்- காங்கேசன்துறைக்கு இடையில் நேற்று முன்தினம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நாளை புதன்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக 1700 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது. நாளை முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து-...

காயமடைந்த விடுதலைப்புலி உறுப்பினருக்கு இரகசியமாக சிகிச்சையளித்தாக பெண் கைது!

சம்பவமொன்றில் காயமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சையளித்தார், இன்னொரு உறுப்பினருக்கு அடைக்கலமளித்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] வட்டக்கச்சியை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், ஏற்கனவே பொலிசாரால்...

கரும்புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் கைது; 15 பேருக்கு வலைவீச்சு!!

விடுதலைப் புலிகளின் கரும்புலி படையணியின் கறுமையான வரி சீருடையுடன் புகைப்படம் எடுத்த ஆறு இளைஞர்கள் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவை சேர்ந்த இளைஞர்களே கைதாகியுள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] வடக்கில் புலிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதை போல தோற்றத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியை பெறவே இவர்கள் நாடகமாடியிருக்கலாமென பொலிசார் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றை...

வடக்கில் போக்குவரத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை

வடக்கில் போக்குவரத்துப் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ ஊழியர்களை சந்தித்தார். வடக்கில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக அவர்...

இந்தியாவின் நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்!

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் இந்தியாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம் அடுத்த மாதமளவில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து மற்றும் சரக்குகளைக் கையாளக் கூடிய துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தினது...

வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தின் பெயரை சப்புமல்கஸ்கந்த எனப் பெயரை மாற்றி சிங்களக் குடியேற்றத்தினை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கச்சல் சமனங்குளம் தமிழர்களின் பூர்வீக கிராமமாக காணப்பட்டதுடன் அங்குள்ள...

யுத்தத்தில் பங்களித்த இரு தளபதிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவிகள்?

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பங்களித்த இரு தளபதிகள் பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் படைத்துறைப் பதவிகளில் மிக உயரிய விருதாக...

வடக்கில் இராணுவம் அகற்றப்பட வேண்டும்: பென் எமர்ஷன்

வடக்கு மாகாணத்தில் இராணுவம் அகற்றப்படும்போதே தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த முடியுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட நிர்ணர் பென் எமர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் பயங்கரவாதத்தை ஒழிக்கும்போது மனித உரிமைகள் பின்பற்றப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவ்வறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித...

யாழில் தொடரும் பாலியல் துஷ்பிரயோகங்கள் – மீண்டுமொரு சம்பவம் பதிவு!

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்குச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், நேற்று வான் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வானையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த நபரை கோப்பாய் பொலிஸ்...

காணிப் பிணக்கு கைகலப்பாக மாறியதில் முதியவர் அடித்துக் கொலை – சந்தேகநபர்களிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸார்!!!

காணித் தகராறு ஒன்று கைகலப்பாக மாறியதில் அரச உத்தியோகத்தர்கள் இருவரின் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாழில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் வடக்கு எழுதுமாட்டுவாளைச் சேர்ந்த செல்லன் சின்னத்துரை (வயது-78) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். அதே இடத்தில் காணித்தகராறு கைகலப்பாக மாறியதில்...

தாதிய உத்தியோகத்தரின் உயிரிழப்பில் மர்மம்!

பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரான கர்ப்பிணிப் பெண் ஊசி மருந்து ஏற்றி உயிரிந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஊசி மருந்து அவரது உயிரிழப்புக் காரணமா? என்று கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர். மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராகப் பணிபுரியும் திருமதி குலதீபன் பிருந்தா...

பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக மாற்ற கூட்டமைப்பு பேச்சு

இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தகவல் வெளியிட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியான பயணிகள் விமான சேவைகளை நடத்தும் வகையில், பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு,...
Loading posts...

All posts loaded

No more posts