Ad Widget

உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டண விபரம்

கொழும்பு- யாழ்ப்பாணம்- காங்கேசன்துறைக்கு இடையில் நேற்று முன்தினம் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு நாளை புதன்கிழமை தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள உத்தரதேவி ரயிலின் பயணக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக 1700 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 600 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

நாளை முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து- யாழ்ப்பாணம் 11.50 மணிக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு காலை 6.10 மணிக்கும் புறப்படும்.

Related Posts