ரவிராஜ் கொலைக்கு கருணாவிற்கு 5 கோடி வழங்கினார் கோட்டா?

யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்ய 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என புலனாய்வு தகவல் பிரிவின் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் லியனாராச்சிகே அபயரத்ன தெரிவித்துள்ளார். குறித்த தொகை கருணா தரப்பினருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ரவிராஜ் கொலை...

வாள்வெட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சி உறுப்பினருக்கு பிணை!

வாள்வெட்டு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது. 3 மோட்டார்...
Ad Widget

வடக்கில் குற்றச் செயல்களுக்கு முடிவுகட்ட 850 தமிழ் பொலிஸாரை இணைக்க முடிவு

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளனர். இதற்காக தமிழ் இளைஞர்கள் யுவதிகள் முன்வந்து இணைய வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே...

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி இணக்கம் – சுமந்திரன்

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று (வியாழக்கிழமை) முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பாக...

யாழ். பல்கலை பகிடிவதை விவகாரம்: பொலிஸாரின் பாரபட்சம் குறித்து விசனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து பொலிஸார் பாரபட்சமாக நடப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, ‘யாழ்ப்பாண பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து...

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்: சமந்தா பவர்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் இழந்ததை மீளவும் வழங்க முடியாத போதும் அவர்களது கருத்துக்களுக்கேனும் செவிமடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச...

யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபரின் மோசடிக்கு அதிகாரிகள் துணை!

யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார். வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு...

காலாவதியான தண்ணீர்ப் போத்தல்கள் விற்பனையில்…

காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனைக்கு வைத்திருந்த ஹோட்டல் முகாமையாளருக்கு நீதிவானால் 4 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டுள்ள குடிதண்ணீர்ப் போத்தல்களை அழிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை மதிப்புறுத்தும் நிகழ்வு யாழ்ப்பாண நகர் ஆசீர்வாதம் வீதியிலுள்ள பிரபல்யமான விடுதி மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றது. வங்கி ஒன்றால் நடத்தப்பட்ட...

உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து வயோதிபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) தஞ்சமடைந்துள்ளார். இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தஞ்சமடைந்திருந்தார். இந்நிலையில், அவரை...

ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் புதிய விசா நடைமுறை

சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அந்த வகையில், பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்...

இந்திய விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் வான் பரப்பில் பறந்த இந்திய விமானப்படை விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனெரல் ஆசிஃப் கஃப்ரூர் அறிவித்துள்ளார். ஒரு விமானம் பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீருக்குள்ளும் இன்னொரு விமானம் இந்திய ஆளுகைக்கு உள்பட்ட காஷ்மீரிலும் விழுந்ததாக கூறியுள்ள அவர், ஒரு இந்திய விமானியை தாங்கள் கைது செய்துள்ளதாக...

காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!

முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ யாழ்ப்பாணத்தைச் வந்தடைந்துள்ளது. இந்த ஊர்வலம் இன்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாணத்தைச் வந்தடைந்தது. இதன்போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் தமது...

இணுவிலில் வீடு புகுந்து முதியவருக்கு கத்திக் குத்து!

இணுவில் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு வசித்துவரும் முதியவரை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துள்ளார். கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்துக் காயங்களுக்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்....

வட மாகாண மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும்!

யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர், கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் மருந்தகங்கள் திறந்திருந்தமையை பாராட்டினார். அத்தோடு வட மாகாணத்தில் உள்ள அனைத்து...

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய மாணவர்களுக்கு தடை!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனினால் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிடிவதை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினைத்...

நாடாளுமன்றில் வாயே திறக்காத உறுப்பினர்களின் பட்டியல் – 2 தமிழர்களும் உள்ளடக்கம்

இலங்கை நாடாளுமன்றத்தில் 2018 ஆண்டில் வாயே திறக்காமல் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர். இவர்களின் பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கணிப்பிடும் மந்திரி இணையத்தளம் (Manthri.lk) வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவு, அவர்கள் விவாதங்களில் கலந்துகொள்வது உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகள் குறித்தோ அல்லது...

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவு

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட. மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னாண்டோ நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்படி உத்தரவை கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப்...

வடக்கில் 248 பாடசாலைகளுக்கு நிரந்தர பூட்டு?

வடக்கு மாகாணத்தில் உள்ள 248 பாடசாலைகளை மூடுவதற்கான அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 இற்குக் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள், முன்னேற்றங்களை காண்பிக்காவிட்டால், அவற்றை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு...

வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு!

வடக்கு மாகாண ரீதியாக நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் தெரிவித்ததாவது:-...

சி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றது – றெமீடியஸ்

யாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச் சூழ அமைக்கப்பட்ட கடைத் தொகுதி விவகாரமானாலும் சரி முறைகேடுகளை ஏற்படுத்தியவர் யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் சி.வி.கே சிவஞானமே. இன்று இச்சபையில் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவதற்கும் அவரே காரணமானவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ்...
Loading posts...

All posts loaded

No more posts