- Friday
- May 8th, 2026
அதிகார பகிர்வு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையத்தில் தமிழ் தேசிய...
தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, மனித உரிமை விடயங்களில் அரசாங்கம் எதிராக நிற்கக்கூடாதென்றும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர்...
மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை என்று தெரியவந்ததை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர்...
நாட்டில் நிலவிவரும் அதீத வெப்பநிலை காரணமாக ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த சீர்கேடுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கியுள்ளது. இதன்பிரகாரம், உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன்கூடிய மிருதுவான ஆடைகளை அணியுமாறு தெரிவித்துள்ளது. குறிப்பாக விவசாய, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகையில் சூரியக் கதிர்களின் நேரடித் தாக்கத்தைத் தவிர்க்க...
அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் மூளாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பொன்னொளி நகர் மாதிரிக் கிராமத்தை வீடமைப்பு நிர்மாணத்துறை கலாசார அலுவல்கள் அமைச்சர் சஐித் பிரேமதாசா பொது மக்களிடம் கையளித்துள்ளார். முறைந்த முன்னாள் ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின்...
காணாமலாக்கப்பட்டவா்கள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பும் வகையில் துண்டுபிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம் என வலியுறுத்தியும் பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டமொன்றை 16ஆம் திகதி நடத்தவுள்ளனர். இந்நிலையில் அதனை குழப்பும் வகையில் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தை 15ஆம் திகதி...
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருதல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மட்டக்களப்பு மாநகரசபையில் 29 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 16வது பொது அமர்வின் போது இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினைக் கோருதலும்,...
இலங்கையை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த, புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்கள் மனம் தளராது போராட வேண்டும் என, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். பிரித்தானியா, கனடா, ஜேர்மனியில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றங்களின் முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்...
மானிப்பாயில் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் மீது ஆவா குழுவிலிருந்து தண்டனைபெற்ற சிலர் சேஷ்டை விடுவதாக தகவல் வந்துள்ளது. தனியார் வகுப்புகளுக்கும், கோயில்களுக்கும் செல்லுகின்ற பெண்களிடம், அவர்கள் செல்லும்போது பின்னால் தட்டிவிட்டு ஓட்டம்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றால் ஆவா குழு என தண்டனை பெற்ற உறுப்பினர்களே இவ்வாறு சேஷ்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில்...
வவுனியா - பெரிமடு பகுதியில் வைத்து சிறுவன் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து குறித்த சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா - நெடுங்கேணி - பெரியமடு பகுதியில் வைத்து கடந்த 6 ஆம் திகதி 8 வயதுடைய...
நாட்டில் நிலவிவரும் வெப்பத்துடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக குறித்த...
வலிகாமம் வடக்கில் 227 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள இரகசிய நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணிகளை சுவீகரிப்பதற்குரிய கடிதங்கள் நேற்று (வியாழக்கிழமை) அக்காணிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையிலையே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணிகளை சுவீகரித்து கடற்படை முகாம், சுற்றுலாத்தலம் அமைப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அக்காணிகளின் உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்....
வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுவன் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். பாடசாலை சென்று வீடு...
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் சாட்சியால் அடையாளம் காட்டப்பட்டனர். இதனையடுத்து சந்தேகநபர்கள் நால்வரின் விளக்கமறியலை வரும் 21 ஆம் திகதி வரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம், கொக்குவில் கருவப்புலம்...
ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள்...
மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் முற்பட்டவை என்று காபன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட...
டக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்கின்றது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடும் சென்.ஜோண்ஸ்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறைகளின் பிரதான சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த இந்தச் சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர்....
25 வருடங்களாக ரயில்களில் பிச்சை எடுத்து 3 வீடுகள் கட்டிய ஹம்காவை வசிப்பிடமாக கொண்ட 65 வயதுடைய கண்தெரியாத முதியவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்படும் போது வங்கி கணக்கில் 5 இலட்சம் ரூபாவும் வைத்திருந்துள்ளார். ஹம்பகா- கொழும்பு கேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் ரயில் பயணிகளிடம் பணத்தினை...
வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை கடுமையாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களின் வெப்பிநிலை 32 தொடக்கம் 41 செல்சியஸாகப் பதிவாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம், பொலன்றுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...
Loading posts...
All posts loaded
No more posts
