Ad Widget

யாழில் மாதிரி கிராமத்தை திறந்து வைத்த சஜித்!

அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவண தேசிய வீடமைப்பு வேலைத் திட்டத்தின் கீழ் வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் மூளாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பொன்னொளி நகர் மாதிரிக் கிராமத்தை வீடமைப்பு நிர்மாணத்துறை கலாசார அலுவல்கள் அமைச்சர் சஐித் பிரேமதாசா பொது மக்களிடம் கையளித்துள்ளார்.

முறைந்த முன்னாள் ஐனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் தனக்கென சொந்தமான வீட்டில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணக்கருவினை நிறைவேற்றும் வகையில் 2025 ஆம் ஆண்டில் செமட்ட செவண யாவருக்கும் வீடு பெற்றுக் கொடுக்கும் திட்டத்திற்கமைய மூளாயில் மாதிரிக் கிராமமொன்று அமைக்கப்பட்டது.

இக் கிராமத்தை கையளித்து அந்த வீடுகளைத் திறந்து வைக்கு நிகழ்வு நேற்றைய தினம் (8) நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஐித் பிரேமதாச இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, மாதிரிக் கிராமத்தை அந்த மக்களிடம் கையளித்து, வீட்டையும் திறந்து வைத்திருந்தார்.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், ஈ.சரவணபவன், இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடற்றவர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கும் வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாதிரிக் கிராமங்கள் வீடமைப்புத் திட்டத்தின் 176 ஆவது திட்டமாகவே சுமார் 65 வீடுகளைக் கொண்டதாக பொன்னொளி மாதிரிக் கிராமத் திட்டம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதே போன்று யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்திலும் நாடளாவிய ரீதியும் இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts