Ad Widget

தொடரும் வெப்பமான காலநிலை – சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவிவரும் அதீத வெப்பநிலை காரணமாக ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படலாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சீர்கேடுகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கியுள்ளது.

இதன்பிரகாரம், உடலை மூடும் வகையில் இளம் நிறங்களுடன்கூடிய மிருதுவான ஆடைகளை அணியுமாறு தெரிவித்துள்ளது.

குறிப்பாக விவசாய, கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகையில் சூரியக் கதிர்களின் நேரடித் தாக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அவ்வாறே தினந்தோறும் குளிப்பது பொருத்தமானது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அதிக சூரிய வெளிச்சம் இருக்கும் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் திறந்த வெளிகளில் விளையாடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் கூடுதலான வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை தனியே வாகனங்களில் விட்டுச்செல்ல வேண்டாம் என பெற்றோரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனிப்பும், மதுசாரமும் செறிந்த பானங்களைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதாகும் என்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளைய தினம் அதிகமான வெப்பநிலை நிலவக்கூடுமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Related Posts