Ad Widget

இலங்கையை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த, புலம்பெயர் தமிழர்கள் மனம் தளராது போராட வேண்டும் – சிவாஜிலிங்கம்

இலங்கையை போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்த, புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர்கள் மனம் தளராது போராட வேண்டும் என, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனியில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றங்களின் முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேசம் எங்களை கைவிட்டு விட்டது, சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கின்றது என மனதை தளரவிட வேண்டாம்.

எங்களின் அழுத்தங்களின் பேரிலேதான் பல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. நடக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே எதுவும் நடக்காது என நாங்கள் பேசாமல் பேசா மடந்தையாக உட்கார்ந்து இருப்போமாக இருந்தால் எதுவுமே நடக்காமல் போகலாம்.

கனடா உள்ளிட்ட சில நாடுகளில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்கள் காணப்படுகின்றனர். எனவே வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்“ என குறிப்பிட்டார்.

Related Posts