இலங்கை பௌத்த நாடென்றால் வடகிழக்கை தனித் தமிழர் தாயகமாக வழங்குவது அவசியம் – விக்னேஸ்வரன்

இலங்கையின் மொத்த சனத் தொகையில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் சிங்கள பௌத்தர்கள் என்ற முறையில் இது சிங்கள பௌத்த நாடென்றால் வட கிழக்கை சிங்கள பௌத்த நாடு என்ற கருத்தமைப்புக்கு வெளியே எடுத்து அதற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம். ஏன் என்றால் வடகிழக்கு தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்கள் பௌத்தத்தைத் தழுவி பின்னர்...

வவுனியா பல்கலைக்கழகத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. வவுனியா பல்கலைக்கழகத்துக்கான வர்த்தமானி அறிவிப்பை உயர் கல்வி அமைச்சர் ரவூக் ஹக்கீம் விரைவில் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. வவுனியா வளாகம் 1991 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்து. 1997 ஆம் ஆண்டிலிருந்து வளாகமாக இது செயல்பட்டு வருகிறது. 28...
Ad Widget

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு!

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது. நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு,...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கமைவாக அரச ஊழியர்களுக்கு சம்பள இடைக்காலக் கொடுப்பனவாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “2019ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கமைவாக...

ஆனையிறவில் கைது செய்யப்பட்ட வல்வையைச் சேர்ந்த இருவரும் பிணையில் விடுவிப்பு

வல்வெட்டித்துறையிலிருந்து திருகோணமலைக்கு திருமணச் சடங்கின் பின்னான விருந்துக்கு காரில் பயணித்த இருவர், துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வாடகைக் காரில் பயணித்த போது, ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனைக்கு உள்படுத்திய போது, காரின் பின்பகுதியில் துப்பாக்கி ரவைகள் இரண்டு மீட்கப்பட்டன என்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட...

வடக்கு ஆளுநர் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி!!

இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கு நேற்று மாலை சென்ற வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இறுதிப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்ளுடனான ஆளுநரின் சந்திப்பு ஒன்று முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யுத்தத்திற்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு...

நாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற யாழில் வசதி

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும்...

யாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்கள் புறக்கணிப்பு

நாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சில பல்கலைக்கழகங்கள் இன்று (புதன்கிழமை) மீள திறக்கப்படவுள்ளன. குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்தவகையில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகிய பாடங்களுக்கும் சித்த மருத்துவ அலகுக்குமான...

சமூகப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட வருடாந்தத் திருவிழா!! – பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்!!!

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சமூகப் பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் கடந்த வருடம்...

விடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம்...

ரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்....

யாழிலிருந்து வெளிநாட்டு அகதிகள் மீள திருப்பி அனுப்பப்பட்டனர்!

யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட அகதிகள் குடும்பம், மீண்டும் வவுனியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணத்தில் தங்க வைப்பதற்கு பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் மேற்கொண்ட நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலையிட்டு நிறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது. நீர்கொழும்பில் தங்கியிருந்த வெளிநாட்டு அகதிகளிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, அவர்களை...

வற்றாப்பளைக்கு குண்டுடன் சென்றார்களா?: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது!!

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்றவர்கள் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவரே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டனர். இதன்போது, பொலிஸாருக்கும் வானில்...

வடக்கில் 81 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 81 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (20) பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்றது. 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 9 விவசாய...

தமிழ் ஈழம் சைபர் படையே இலங்கையின் வலைத்தங்களைத் தாக்கியது – பொலிஸ்

தமிழ் ஈழம் சைபர் படை என்ற குழுவே, இலங்கையில் 11 இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதலில், ஈடுபட்டது, என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளிட்ட 10இற்கும் அதிகமான .com மற்றும் .lk ஆகிய முகவரிகளைக் கொண்ட, இணையத் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்தன. ரஜரட்ட...

யாழ் தனியார் வைத்தியசாலையில் சிறுவன் உயிரிழந்தமைக்கு சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா?

யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா? என முழுமையான விசாரணையை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுவனுக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாக மருத்துவ நிபுணரால்...

ஐ.எஸ் அமைப்பின் இலக்கு இலங்கையாக இருக்கவில்லை: அமெரிக்கா

குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனின் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ஜோனா பிளான்க் இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, இதனை தெரிவித்துள்ளார். அவர்...

தொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மணி ஒலி எழுப்பி வடக்கில் அஞ்சலி

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருமாதம் கடந்துள்ளமையை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக அனைத்து வணக்கஸ்தலங்களிலும் மணி ஒலி எழுப்பி அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு வடக்கிலுள்ள அனைத்து வணக்கஸ்தலங்களிலும் மணியோசை ஒலிக்கச் செய்ய வேண்டுமென அவர்...

“நெருப்பில் குளித்த நினைவலையா பத்தாண்டுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடு!!

உச்ச பாதுகாப்புக்குள் நல்லூர் கந்தன்!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டும், அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகின்றது. ஆலயத்திற்கு வரும்...
Loading posts...

All posts loaded

No more posts