- Thursday
- May 7th, 2026
கழுத்துறை மாவட்டம் பதுரலிய என்ற இடத்திலிருந்து 13 கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பாடசாலைக் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் இருந்த பொதி ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலையின் காவலாளி வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பொதியில் கைக்குண்டுகள் இருப்பதைக்கண்டு அவர்றை மீட்டுச் சென்றனர். தற்போது அதுகுறித்த விசாரணைகளில் பொலிஸார்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம், வரலாற்றுச்...
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மாணவர்களின் உணவு வகைகளை கைகளால் சோதனையிடுவது தொடர்பில் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் , ஆசிரியர்கள்...
முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறுவிளைவித்த கொக்குளாய் பகுதியினை சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் நேற்று (22) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்., கடந்த 15.05.2019 அன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கொக்குளாய் மேற்கு 77 ஆம் இலக்க கிராம சேவையாளர்...
பாகிஸ்தான் அகதிகளால் எமது மக்களுக்கு மாத்திரமன்றி,அருகில் உள்ள இந்தியாவுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பாகிஸ்தான் அகதிகளை அழைத்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்க வைத்திருந்தமை தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து...
அரசியலமைப்பில் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். இதனையடுத்து 2018 ஓகஸ்ட் 8ஆம் திகதி அவருக்கு...
யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடர்பில் யாழ் மாநகரசபையினால் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு யாழ் மாநகர சபை முதல்வர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிவித்தலினை இங்கு இணைக்கின்றோம். இந்த புதிய திண்மக்கழிவகற்றல் பொறிமுறையை முறையாக ஒழுங்குபடுத்தும்...
பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தவறவிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....
புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒத்துழைப்பு மையத்திலேயே குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் புனர்வாழ்வு நாயகம் மேஜர் ஜெனரல் ஜனக...
நிரபராதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். பல்கலை மாணவர்களினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறு பல்கலைக்கழக...
வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என்றும் ஐ. நா மனித உரிமைகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன்...
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த மாதம் வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின்கீழ், அடுத்த மாதம் 3ஆம் திகதி முதல் 8...
தற்போதைய நாடாளுமன்ற காலத்தில் அரசியல் தீர்விற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கின்றது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்....
இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்களை வடக்கில் தங்க வைப்பதற்கு தமிழ் அரசு கட்சியின் சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் சம்மதம் வெளியிட்டிருந்தனர். எனினும், பிரதேச அளவில் இருக்கின்ற அரசியல்வாதிகளே அரசியல் நோக்கங்களுக்காக எதிர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன். யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நேற்று நடத்திய...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் 50 பேர் வரை...
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் நேற்று (புதன்கிழமை) இணக்கம் வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துநர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும்...
வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், எனினும் இவ்விடயங்களில் அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து செயற்படவில்லையென ஆதங்கம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண...
கல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட பேதங்களே 1983 ஆம் ஆண்டு வன்முறைக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, டி.எஸ். சேனநாயக்கவின் ஆட்சி காலத்தில் கட்டியெழுப்பட்ட பொதுக்கல்வி முறையை மீண்டும் உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிழ்கள் வழங்கி...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியனவே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம்...
Loading posts...
All posts loaded
No more posts
