2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கமைவாக அரச ஊழியர்களுக்கு சம்பள இடைக்காலக் கொடுப்பனவாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கையும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “2019ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கமைவாக அரச ஊழியர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு இடைக்காலப் படியாக இணைக்கப்படும்.
அத்துடன், வாழ்கைச் செலவுப் படி தொடர்ந்தும் 7 ஆயிரத்து 800 ரூபாயாகப் பேணப்படும்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.