Ad Widget

வவுனியா பல்கலைக்கழகத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

வவுனியா பல்கலைக்கழகத்துக்கான வர்த்தமானி அறிவிப்பை உயர் கல்வி அமைச்சர் ரவூக் ஹக்கீம் விரைவில் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

வவுனியா வளாகம் 1991 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்து. 1997 ஆம் ஆண்டிலிருந்து வளாகமாக இது செயல்பட்டு வருகிறது.

28 வருட காலமாக இவ்வாறு இயங்கி வரும் நிலையில், இதனைத் தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையை உயர் கல்வி அமைச்சர் ரவூக் ஹக்கீம் முன்னெடுத்திருந்தார்.

வவுனியா வளாகத்தில் தற்போது பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் வணிக கற்கைகள் பீடம் ஆகிய இரண்டு பீடங்கள் மட்டும் உள்ளன.

இந்த வணிக கற்கைகள் பீடத்தின் கீழ் நிதி, கணக்காய்வு, பொருளாதார விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ கல்விப் பிரிவும் இதன் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கீழ் பௌதீக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் விஞ்ஞான கல்விப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கற்கை நெறியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த பட்டப்படிப்பு கற்கை நெறி ஆங்கில மொழியில் கற்பிக்கக் கூடிய வகையிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு நகரத் திட்டமிடல், நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Posts