- Wednesday
- May 6th, 2026
கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. கோண்டாவில் உடும்பிராய் மேற்கு வீட்டிற்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார்...
அரச வேலை பெற்றுத்தருவதாக இளம் பெண்களிடம் சேட்டை செய்த வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிக்கினார்!!
அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி சித்தன்கேணி இளைஞர்களிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டார். வலி. மேற்கு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்...
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று வெள்ளிக்கிழமை(06) நண்பகல்-12 மணி முதல் அரைநாள் தொழிற்சங்கப் போராட்டத்தையும், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்படி போராட்டங்களுக்கான அழைப்பினை விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த சகல கல்விசாரா ஊழியர்களையும், இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்...
பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று நேரில் ஆராய்ந்தார். அமைச்சர் தலைமையில் 80 பேர் கொண்ட குழுவினர் இதுதொடர்பில் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம் பலாலி விமானத் தளம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பலாலி பிராந்திய...
வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் மக்கள் பேரவை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ...
நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடங்குவதற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செவ்வியில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம் என்னவென கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “2015ஆம் ஆண்டு தேர்தலுக்குப்...
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் உறுதிமொழியையடுத்து சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு இன்று ஆளுநர் தலைமையில் நியமனங்கள் வழங்கப்படவிருந்தன. இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள்...
யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது. மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத்...
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. பிடாரி...
முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர் என அறியப்படுகிறது. முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில நேற்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும்...
இறுதி யுத்தத்தின்போது தமிழர்களை இன அழிப்புச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய...
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் முன்பாக...
தென்னிந்தியப் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.அங்கு அவர் வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை கண் வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். லண்டன் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் ஸ்தாபகர் வேலாயுதம் சர்வேஸ்வரனின் தலைமையில் 150 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த கண் வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அதன் நிறுவுனர்...
பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த படைச் சிப்பாய் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்தார். சிப்பாய் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பலாலி இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த படைச் சிப்பாய் மீது முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும்...
யாழ்ப்பாணம் நகரில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளம் பெண்ணிடமிருந்து பெறுமதி வாய்ந்த அலைபேசியுடன் கைப்பையைப் பறித்துச் சென்ற நபர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையிடப்பட்ட அலைபேசி மற்றும் கைப்பை என்பன அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. கொள்ளையிட்ட நபர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்....
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 500 ரூபாய் கொடுப்பனவு 750 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வருடாந்தம் 1,30,000 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுகின்றனர் என்பது...
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் குரலிசை 2019 தேர்வு நடைபெறவுள்ளது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வடமாகாண இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாக ஆளுநரின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள இந்த குரலிசை தேர்வில் வயது 15 இற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்...
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த 6 பேரும் நேற்றைய தினம் முழங்காவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்....
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சிக்கான ஆரம்பப் பணிகளுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எண்டர்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு யாழ்ப்பாணத்தில் செப்ரெம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெறும்...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றின் உத்தரவில் அவை நேற்று தோண்டி எடுக்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் உடல் பாகங்கள் நீதிமன்ற...
Loading posts...
All posts loaded
No more posts
