- Tuesday
- May 5th, 2026
தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு பிரதிநிதிகளுடன் ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்...
எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக கடைகள் அனைத்தும்...
முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும், நியமங்களையும், நம்பிக்கையினையும் சேர்த்தே புதைக்கபட்டுவிட்டதை இன்றளவும் மெய்ப்பிப்பதாகவே தமிழினப் படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது. போர் வலயத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் போர் முடிவுக்கு...
2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் வைத்து தனது கழுத்தை பிளேட்டால் கீறி உயிர் துறப்புக்கு முயற்சித்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. சந்தேகநபருக்கு எதிராக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த...
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக முன்றலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போராட்டக்களத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அத்தோடு அவர்களுடன்...
நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது. இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து திருகோணமலைக்குச் சென்று, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது. இந்த பாதயாத்திரை செல்லும்...
எதிர்வரும் 16ம் திகதி இடம்பெறும் எழுக தமிழ் எழுச்சி பேரணியை முன்னிட்டு, தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பின மூலம் வழமை மறுப்பு போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் ஒன்றுபட்டு, தென்னிலங்கை...
வடக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு உதவுவதாகத் தெரிவித்து பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்திடம் பல கோடி ரூபா நிதியை மோசடி செய்த முக்கியஸ்தர் ஒருவர் உள்பட இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் இலங்கையில் தலைமறைவாகி உள்ளதாக அவர்களிடம் உதவித் திட்ட நிதியை வழங்கிய நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை...
காணாமல்போனோரை நினைவுகூறத்தக்க இடங்கள் அரசாங்கத்தின் அனுசரணையில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் மற்றும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. 42ஆவது மனித உரிமைகள் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. இந்த பேரவையில் குறித்த செயற்குழு முன்வைத்துள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பருத்தித்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளன. அத்தோடு இந்த அனர்த்தத்தில் வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த அனர்த்தம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் பேருந்து, கயஸ்ரக வாகனம், முச்சக்கரவண்டி ஆகியன வீட்டிற்கு வெளியே...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆள்சேர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அரசியல்வாதிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்பட நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் குறிப்பிட்ட சில பணிநிலை வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 876ம்...
வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியா பொலிஸாருக்கு இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் சென்ற வவுனியா பொலிஸார், தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இதனால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உள்ளே...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது கருவிழி ஸ்கேன் அடையாளம் காண்பதற்கான முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உயிரியல் தகவல்களை...
காணாமலாக்கப்பட்டோர் மரணிக்கவில்லை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘காணாமலாக்கபட்டோர் என்று குறிப்பிடுபவர்கள் உண்மையில் காணாமலாக்க்கப்படவும், மரணிக்கவும் இல்லை. காணமலாக்கப்பட்டோர் அலுவலகம் அரசியல் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டது...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்...
எழுக தமிழ் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. போர்க்குற்ற விசாரணையை நடாத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய், வடக்கு- கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து போன்ற...
கோதுமை மாவின் விலையை இன்று முதல் பிறிமா நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன்படி கோதுமை மாவின் ஒரு கிலோவின் விலை 5.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் விலையை 2 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக...
வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனுயாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த 930ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும்...
சர்வதேச விசாரணை என எதுவும் நடக்கப்போவதில்லை. தமிழர்கள் கோட்டாபயவை ஆதரிக்க வேண்டிய தேவையுள்ளது எனவும் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமாகிய வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியா விருந்தினர் விடுதி ஓன்றில் நேற்று முன்தினம் (4) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்....
பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். அத்துடன், பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளூர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பலாலி விமான நிலையத்தின்...
Loading posts...
All posts loaded
No more posts
