மருதனார்மடம் விடுதியில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் விடுவிப்பு!!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர். “இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில்...

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி முயற்சி!!

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி மேற்கொள்ள முயற்சித்த போதிலும் குறித்த கிராம சேவையாளர் சுதாகரித்துக் கொண்டதால், மோசடி கும்பலிடம் ஏமாறாது தப்பிக்கொண்டார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ்.அச்சுவேலி பகுதியை சேர்ந்த கிராம சேவையாளர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர் தன்னை புலனாய்வு பிரிவின் காவற்துறைப்...
Ad Widget

பட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும் – குறை நிரப்பு பிரேரணை இதற்கு தடையாக அமையாது

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்...

பகிடிவதை குறித்து வெளிவந்த செய்திகள் தொடர்பாக யாழ். பல்கலைக்கழகம் விளக்கம்

பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையேனும் கண்டறியப்படவில் என யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சில சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்குழு அதனது அதிகார வரம்பினுள் ஆராய முடியவில்லை. அதனால் இவற்றை ஆராயுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...

மகளிர் தினத்தை துக்கத் தினமாக அனுஷ்டிக்க காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் திகதி முல்லையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் மகளிர் தினத்தை துக்கத்தினமாக அனுஷ்டிக்க தீர்மானனித்திருப்பதாகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) வட்டுவாகல் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர்கள்...

வவுனியாவில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் நாளை!!

அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் புதன்கிழமை 26ஆம் திகதியில் இருந்து சனிக்கிழமை 29ஆம் திகதி வரை குறித்த நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளன. வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 3100 விண்ணப்பதாரிகளுக்கே இவ்வாறு நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவள்ள நிலையில், கடிதங்கள் கிராம சேவகர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேர்முகத்தேர்வுக்கு தெரிவு...

பல்கலைக்கழகக் கற்கை நெறியைக் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு வாய்ப்பு

பல்கலைக்கழகக் கற்கை நெறிகளை பகிடிவதையின் காரணமாக இடையில் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீளவும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொடுக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அந்தவகையில், இக்குழுவிற்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க...

சொகுசுக் காரில் பயணித்த காரைநகர் வர்த்தகரின் குடும்பத்தில் நால்வர் சாவு!!

வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது. பேருந்து – சொகுசுக் கார் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் சொகுசுக் காரில் பயணித்தவர்களே உயிரிழந்தனர். பேருந்துக்கு வைக்கப்பட்ட தீ சொகுசுக் காருக்கும் பரவியதால் அதன் சாரதி எரிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். காரைநகரைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான...

யாழ்ப்பாணத்தில் தொடரும் மோசடிகள்!! பொலிஸ் உத்தியோகத்தரிடமே பணம் பறிப்பு!!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து ஈசி காஸ் (ez case) மூலம் 25 ஆயிரம் ரூபாயை கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதி போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் கடந்த வாரம் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்....

ஒரு லட்சம் வேலைவாய்ப்பிற்கான நேர்முகப்பரீட்சை!!!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 26ஆம் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. தெரிவு செய்யப்படுபவர்கள் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த அலுவலகங்களில்...

வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு!

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இடம்பெற்றதன் பின்னர் பேருந்த மற்றும் வானுக்கு தீ அங்கிருந்த சிலரால் தீ வைக்கப்பட்ட நிலையில் அந்த தீயில் அகப்பட்டு வான் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதியின் சடலம்...

ஐ.நா. பிரேரணை தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

ஐ.நா. பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

பனை ஐஸ்கிரீம் அறிமுகம்! பனைநார் உற்பத்தியும் ஆரம்பம்!!

நாட்டில் பனை நார் உற்பத்தி தற்சயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பனை ஐஸ்கிரீமும் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பனையுடன் தொடர்புபட்ட உற்பத்திகளுக்கு உரிய பெறுமதியை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை தொழில் துறையில் ஈடுபட்டிருந்தோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளானார்கள் என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்த பத்திராஜ தெரிவித்தார். தற்போது...

ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!! பொலிஸார் எச்சரிக்கை!!

தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிய அதிக பணம் கேட்டு மிரட்டி பணத்தினை பெற்று சென்றனர் என பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற இருவர்...

கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தால் இன்று (19-02-2020) பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதவான்நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளம் ஒன்று செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இன்று காலை முதல் இந்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது....

கோட்டாவுடன் டீல் போட்டது யார்?: விக்னேஸ்வரன் கேள்வி

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா? ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்று தான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம்...

புதுச்சேரி- யாழ் கப்பல் சேவை விரைவில்: இந்தியா அறிவிப்பு!

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருதை தந்த மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் உரங்கள், இரசாயனத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை கோயில் இணை ஆணையா் ந. நடராஜன் தலைமையிலான...

இரும்புத் துண்டுகள் பொறுத்தப்பட்ட பொல்லுகளுடன் மூவர் கைது!!

சைக்கிள் செயின் பிறிவில் பொறுத்தப்பட்ட பொல்லுகளுடன் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் மூவரும் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை சங்கானை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். “சந்தேக நபர்களிடமிருந்து 6 பொல்லுகள்...

கடும் வரட்சி – நீர் மின் உற்பத்தி 23.01 சதவீதமாக வீழ்ச்சி

தற்பொழுது நிலவிவரும் வரட்சியின் காரணமாக நாட்டின் மின் உற்பத்தி 38GW (Gigawatt)ஆகும். தற்பொழுது நிலவும் கடும் வரட்சியின் காரணமாக அதாவது 46 வாரங்களாக நிலவி வரும் இந்த வரட்சியினால் நீர் மூலமான மின் உற்பத்தி 23 சதவீதமாக குறைவடைந்துள்ளது. நீரேந்து பகுதிகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் வரையில் நாட்டின் மொத்த மின்...

வித்தியா கொலை வழக்கு: தடயப்பொருளை பயன்படுத்திய பொலிஸ் பரிசோதகர்- விசாரணைகள் ஆரம்பம்

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். தடயப்...
Loading posts...

All posts loaded

No more posts