வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றியவர்கள் வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில்...

தமிழ் மக்களை பிரித்தாள தற்போதைய அரசாங்கம் முனைகின்றது- மாவை குற்றச்சாட்டு

நாட்டில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்தி தமிழ் மக்களை பிரித்தாள தற்போதைய அரசாங்கம் எண்ணுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனவே அந்த சூழ்ச்சிகளுக்குள் அகப்படாது கடந்த காலங்களில் எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குனீர்களோ அதே ஆதரவை மக்கள் தொடர்ந்து வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். குருநகர் தொடர்மாடி விளையாட்டு மைதானம்...
Ad Widget

கடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் வைத்தியர்கள் ஆலோசனை

நாட்டில் தற்பொழுது பெரும்பாலான பிரதேசங்களில் நிலவும் அதிக வெப்பநிலையினால் உடல் ஆரோக்கியம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார பிரிவு ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது. வெப்பநிலையின் காரணமாக வைத்தியசாலைக்கு வரும் நோய் நிலைமைக்கு உட்பட்டுள்ள நோயாளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையில் சிறுவர்கள், குழந்தைகள், வயதானோர் அதிக வெயில் வேளையில்...

புத்தூர் பதற்றநிலை முடிவுக்கு வந்தது- சடலம் வேறு இடத்தில் தகனம்!

புத்தூர் மேற்கு சிறுப்பிட்டி கலைமதி கிந்துபிட்டி மாயனத்தில் உடலை தகனம் செய்ய வந்தவர்களை வல்லை மண்டான் மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எய்திய நிலையில் அவரின் பூதவுடலை கிந்துபிட்டி மயானத்தில் தகனம் செய்ய உறவினர்கள் முயற்சித்த போது குறித்த மாயனத்தைச் சூழவுள்ள மக்கள் அதற்கு கடும்...

லீசிங் நிறுவன ஊழியா்கள் வீடு புகுந்து அட்டகாசம்!! அவமானத்தால் தற்கொலை செய்த பெண்!!!

மோட்டாா் சைக்கிளுக்கு லீசிங் காசு கட்டத்தவறியமையினால் வீடு புகுந்து லீசிங் நிறுவன ஊழியா்கள் தரக்குறைவாக பேசியதுடன் செய்த அட்டகாசங்களால் மனம் உடைந்துபோன 5 பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கின்றது. யாழ்ப்பாணம்- தாவடி தெற்கு கிராமத்தில் நேற்றமுன்தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றியிருக்கின்றது. சம்பவத்தில் சுவிதன் அனுசுயா(வயது34) என்ற குடும்ப...

யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் விஜயம்!!

யாழ்ப்பாண விமான நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட மேம்பாட்டு திட்டங்கள் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை ஆராயும் நோக்கில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி AASL மற்றும் அவரது குழுவினர் நேற்று (26) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். இந்த பயணத்தின் போது, விமான நிலையத்தின்...

அங்கஜனுக்கு எதிராக தீவகத்தில் போராட்டம்!

தீவகப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதனால், வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வேலணை பிரதேச செயலகத்தில் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

பாக்கு நீரிணையை 10 மணி நேரத்தில் கடந்து வெளிநாட்டவர் சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 10.15 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்தார். பாக்கு நீரிணை கடற்பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள மணல் தீட்டுக்களான ஆதாம் பாலமும் பாக்கு நீரிணையை மன்னார் வளைகுடாவில் இருந்தும்...

வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்திற் கொண்டு அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலை 10.30 மணி முதல் நாளை காலை வரை நாட்டில் நிலவக் கூடிய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வட மேல் மாகாணம், மேல் மாகாணம் மற்றும்,...

யாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்?

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக நிர்வாகத்துக்குட்பட்ட திணைக்களங்களில் 700 பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்படலாம் என்று அறிய முடிகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்புகள் 700 தாள்கள் பட்டதாரி பயிலுநர் நியமனம் வழங்கும் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடுமுழுவதும் 53 ஆயிரம் பட்டதாரி பயிலுநர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி செயலகத்தின் தனிப்பிரிவு...

2020 இல் வீதி விபத்துக்களில் 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம்!

சுகாதாரத் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்கள் காரணமாக நாட்டில் 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தேசிய போக்குவரத்து ஆணையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு வீதி விபத்துக்கள்...

யாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்!

யாழ். வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. நேற்று மாலை 6 மணியளவில் வண்ணார்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல், கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரையும் தாக்க முயற்சித்துள்ளது. இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5...

கொடிகாமத்தில் வீடு உடைப்பு – வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்!!

யாழ். கொடிகாமம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளதாக கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடிகாமம் மாசேரிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு வாகனமொன்றில் சென்ற பத்திற்கும் மேற்பட்ட வாள்வெட்டுக் குழுவினர் அந்த வீட்டினுள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வீட்டு...

பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் 4 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண் தெரிவித்த அவர், தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடமே...

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு – நேர்முகத்தேர்வில் இராணுவத்தினர்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்கள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றன. இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், வவுனியாவில் அரச உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு இராணுவ வீரர்களும் குறித்த...

பாணின் விலை ஐந்து ரூபாவினால் குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் பாணின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (25 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் பேக்கரி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைகளின் நன்மைகளை மக்களுக்கு வழங்கும் வகையில்...

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு – யாழ். மாவட்டத்தில் 26 066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 26 066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்...

அரசாங்க பாடசாலைகளில் அடுத்தவருடம் முதல், முதலாம் தவணைப் பரீட்சை இரத்து

அரசாங்க பாடசாலைகளில் எதிர்வரும் காலங்களில், முதலாம் தவணைப் பரீட்சையை நடத்துவதில்லையென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சை 2021 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் பாடசாலை தவணை காலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்விச் சுற்றுலா, கண்காட்சி, கிரிக்கெட் போட்டி மற்றும்...

நெடுந்தீவு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

நெடுந்தீவு பிரதேச சபையினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று(செவ்வாய்கிழமை) பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பெட்ரிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அங்கத்தவர்கள் எவரும் தெரிவுக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. ஈழ மக்கள் ஜனநாயக்...

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட அதிபர், ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய அவர்கள் நாளை (புதன்கிழமை) இவ்வாறு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிகாரிகளினாலோ அல்லது வேறு வகையிலோ அச்சுறுத்தலேனும் அதிபர்,...
Loading posts...

All posts loaded

No more posts