பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர் கையேடு வெளியாகியது!!

2019/2020 கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கையேடுகளை இன்று (05) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்களுக்கான கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஆ​ணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மாணவர் கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.ugc.ac.lk/...

யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவர்களும் விடுவிப்பு!!

யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் காவல்துறையினரினால் சில மணிநேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மத்திய கல்லூரிக்கும் யாழ்.பரியோவான் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவுள்ள “வடக்கின் போர் ” என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டியினை முன்னிட்டு வீதிகளில் பாடசாலை சீருடைகளுடன் , பாடசாலை கொடிகளை அசைத்தவாறு பாண்ட் வாத்தியங்களை இசைத்து மகிழ்சிகளை வெளிப்படுத்திய யாழ்.மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார்...
Ad Widget

நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு மாதகால தலைமைத்துவ பயிற்சி!!

வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் 45,585 பேருக்கான நியமனக் கடிதங்கள் செயலாளர் / அரச பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. நியமனங்களை பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் தமது பிரதேச செயலாளரிடம் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக அறிக்கையிடுவதுடன், பிரதேச செயலாளரினால் தமது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

தனிமைப்படுத்தப்பட்ட பிரிவாக மாற்றப்பட்ட ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை!

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் வேகமாக பரவி வரும் கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அங்கிருந்து இலங்கைக்கு வருபவர்களை ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை தனிமைப்படுத்தப்பட்ட பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த நாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகளையும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி...

வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு!

வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சரத் பிரேமசிறி இதனைத் தெரிவித்துள்ளார். வளிமண்டலத்தின் தூசு துகள்கள் தொடர்பான அமெரிக்க குறியீட்டின் அடிப்படையில், 50 முதல் 100 வரையிலான அளவு தூசு துகள்கள் வளிமண்டலத்தில் உள்ளன. இந்த நிலையில், சில சந்தர்ப்பங்களில் அந்த நிலைமை 100...

யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது பொலிஸார் விசாரணை!!

யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் 50 பேர் வரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையில் “வடக்கின் போர்” என அழைக்கப்படும் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை சீருடையில், பாடசாலை கொடிகளுடன் பாண்ட் வாத்தியங்கள் இசைத்தவாறு...

தாவடியில் வாள்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு வாள்களை யாழ்ப்பாணம் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன எனக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த வீட்டை இன்று அதிகாலை சோதனையிட்டனர். இதன்போது வீட்டின் முன் முகப்புக் பகுதியிலிருந்து இரண்டு கூரிய வாள்கள் மீட்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம்...

பருத்தித்துறையில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது!

உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையில் வைத்து குறித்த நால்வரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நால்வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ். அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினரும் பயங்கரவாத...

யாழில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மார்ச் 11-17வரை!!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் மார்ச் 11ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பிரதேச...

கோரோனா வைரஸ்!!! சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு

இந்தியாவில் கோவிட்-19 (கோரோனா) வைரஸ் வேகமாக பரவி வருவதால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 3,100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே, கேரளாவில்...

பட்டதாாிகளுக்கான நியமனம் இடைநிறுத்தப்பட்டது..! தோ்தல் ஆணைக்குழு அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற தோ்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னா் இடம்பெற்ற பட்டதாாிகள் நியமனத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு தோ்தல் ஆணைக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. தோ்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னா் நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாாிகளுக்கு அவசர அவசரமாக நியமனம் வழங்கப்பட்டது. இதன் கீழ் வடக்கு மாகாணத்தில் மட்டும் 237 பட்டதாாிக ள் நியமனத்தை பொறுப்பேற்றனா். இந்நிலையில் தோ்தல் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற...

யாழ் சென்.ஜோன்ஸ் மாணவர்களின் முன்னுதாரணமான செயற்பாடு!

யாழ் பரியோவான் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் தற்போது பழைய மாணவர்களாக ஒன்று கூடி கைதடி முதியோர் இல்லத்தில் அவர்கள் நேற்று செய்த செயற்பாடு அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. வருடாவருடம் வடக்கின் போர் என அழைக்கப்படும் யாழ் பரியோவான் கல்லூரிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி நடைபெறுவது வழக்கம் . இந்த வருடமும்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் வடக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்!

வரும் ஏப்ரல் 25 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களைப் போன்று இம்முறையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல்...

கடும் வெப்பம்: 4 மாகா­ணங்­க­ளுக்கு விஷேட அறி­வு­றுத்தல்

நாட்டில் நிலவும் அதிக வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக வடமேல், மேல், சப்­ர­க­முவ மற்றும் தென் மாகா­ணங்­க­ளுக்கும் மன்னார், மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கும் விஷேட அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பகு­தி­களில் வெப்பம் அதி­க­ரிக்கக்கூடும் என்­பதால் பொதுமக்கள் சுகா­தார நலன் தொடர்பில் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும் என்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. அதிக வெப்­ப­மான கால­நிலை...

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்...

கொரோனா தொற்று – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களை 14 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும்...

வட மாகாணத்தை குலுக்கிய கொள்ளையர்கள் கைதாகினர்!!

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலிக் காவற்துறையினர் தெரிவித்தனர். “சந்தேகநபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள் மற்றும் 2...

வாக்காளர் எண்ணிக்கை 271,789 ஆல் அதிகரிப்பு!!!

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவாக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக எதிர்வரும் தோர்தல்களில் வாக்களிப்பதற்கு இவர்கள் தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வாக்களார் இடாப்புக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59...

பொலிஸ் உத்தியோகத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்

பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கு அமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பொலிஸ் உத்தியோகத்தர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய பதவி நிலைகளுக்கான...

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி?

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் நாடாளுமன்றத்தை இன்று கலைக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில், நான்கரை வருட நிறைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலொன்றுக்கு அரசாங்கம் செல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமாயின் பிரதமர் மஹிந்த...
Loading posts...

All posts loaded

No more posts