Ad Widget

முழங்காவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒருவருக்கு கொரோனா – வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்து நேற்று போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி. (மேற்படி பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று என 13 ஏப்ரல் உறுதிப்படுத்தபட்டவர்.)

ஏனைய பரிசோதனைக்கு உட்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது.

…………………….

76 பேருக்கான COVID – 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் – 9 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 7 பேர்.

* ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை – ஒருவர்.

* வவுனியா பொது வைத்தியசாலை – 3 பேர்.

* முல்லைத்தீவு பொது வைத்தியசாலை – ஒருவர்.

* முல்லைத்தீவு வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்.

* முல்லைத்தீவு புதுமாத்தளன் தனிமைப்படுத்தல் நிலையம் – 54 பேர்.
(வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு 26 ஏப்ரல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் 21 ஏப்ரல் முல்லைத்தீவு பதவிசிரிபுர நோக்கி பயணித்த ஏனைய படைவீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்)“ என பதிவிட்டுள்ளார்.

Related Posts