- Monday
- May 4th, 2026
இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோரோனா தோற்று நோய் பரவலைத் தடுக்கும் பொருட்டான ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், வர்த்தக, விவசாய, மீன்பிடி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளின் இடைநிறுத்தம் காரணமாகவும், தொழில் வாய்ப்புக்களை இழந்து...
வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார். ஒரு மில்லியன் ரூபாவுக்கு உள்பட்ட வங்கிக் கடன் நிலுவைகள் அறவீட்டை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தி...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ள நிலையில் இன்று (24.03.2020) காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டது. கிராம சேவகர் , பிரதேச செயலாளர் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் , பொதுச் சுகாதார அதிகாரி , பொலிஸார்...
நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதியளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் மருந்தகங்களிலும் கூடுவதால் ஏற்படும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடமாடும் மருந்துப் பொருள்கள் விநியோகத்தை முன்னெடுக்க மாவட்ட...
சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் கூறுகையில், “சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது பொலிஸாரே. மேலும் பொலிஸார் வடமாகாண சுகாதார...
யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு கட்டங்களாக இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்...
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் 04 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் அப்பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்போதும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுக்கடுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்து. இந்நிலையில் மக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளில் திரண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் உதவித் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்துவரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விபரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாகத் திரட்டப்பட்டது. இந்நிலையில்...
கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது நோயாளர் குணமடைந்து IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க COVID 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் இதனநேற்று தெரிவித்தார்.
கொவிட் 19 என்ற கோரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதுடன், அரச பொறிமுறையினை தடையின்றி பேணுவதற்காக பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் அரச நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், மாவட்ட...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னர் நண்பகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்ட போதும் பிற்பகல் 2 மணிக்கே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி...
கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம்...
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு மில்லியன் ரூபாயுக்கு உள்பட்டு பெறப்பட்ட அனைத்து தனிநபர் கடன்களையும் திருப்பச் செலுத்தும் காலம் 3 மாதங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அத்துடன், அதிகூடிய எல்லை 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட அனைத்துக் கடனட்டைகளுக்குமான கொடுப்பனவு வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும்...
பட்டதாரி பயிலுனர்களாக நியமனக் கடிதம் வழங்கப்பட்டவர்களுக்கு மாதந்தம் 20 ஆயிரம் ரூபாயை வைப்பிலிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும் முகமான மக்களுக்கு பல சலுகைகளை ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதில் ஒரு அங்கமாகவே இது குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட...
யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போது...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் மேலும் 05 பேர் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர்...
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பல் பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நாட்டின் பல பகுதிகள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் நகர்ப் பகுதிகளில் கிருமி நீக்கும்...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள...
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து பணியாற்றுவோர் தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைச் சேகரித்து உணவுப் பொருள் பொதிகள் வழங்கப்படவுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட – உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினை உள்ளவர்கள் தமது கிராம சேவையாளருக்கு அறிவிக்குமாறு இலங்கை...
Loading posts...
All posts loaded
No more posts
