Ad Widget

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிப்பு?

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையொன்று இல்லாத காரணத்தினால், அவற்றின் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படுகின்ற மாஜரின் மற்றும் மரக்கறி எண்ணெய்க்கான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பான் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய வரித்திருத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் செயற்படுத்தப்படுகின்றது

இதேவேளை, மக்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் தரம் குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts