- Saturday
- May 2nd, 2026
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் நீதிமன்றங்களில் விக்டர் டிலான் மற்றும் தனு ரொக் என்பவரும் கைது சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலைய இரகசிய போலிஸார் நவாலியில் நேற்று மாலை முன்னெடுத்த நடவடிக்கையின் போது, அவர்களைக் கண்டுவிட்டு தப்பி ஓட முற்பட்ட போதே இருவரும் கைது செய்யப்பட்டனர். வீடொன்று...
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் ஐவரும் கைது...
ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குளங்கள் மற்றும் கடலோரங்களில் தந்தையை இழந்த உறவுகள் அவர்களுக்கான வருடாந்த நினைவு கூரலையும் அதற்கான பிதிர்க் கடன்களையும் நிறைவேற்றி வருவது வழமை. ஆனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால்...
திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் பற்றிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து மக்களின் வரலாற்றுத் தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை என தேரர் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர்...
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவராலேயே கட்டப்பட்டதாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அநுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே திருகோணமலை, திருக்கோணேச்சர ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த அவர், இவற்றுக்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். என்றபோதும்...
கடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு உண்மையாகவே சுயாதீனமா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால் மிகவும் உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (2020.07.06) காலை வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்...
வவுனியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டமையினால் வடக்குக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. காங்கேசன்துறையிலிருந்து இன்று காலை கொழும்பு பயணித்த சிறிதேவி தொடருந்தே வவுனியா இரட்டைப் பெரியகுளத்தில் ரயில் பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதனால் வடக்குக்கான தொடருந்து சேவைகள் மதவாச்சியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் உத்தியோகத்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது....
நாட்டு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த தகவலை பளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்ற முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப்...
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் தான் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த விடையத்தை நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறினால் தேர்தலில்...
வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அவர்களில் 210 கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மல்லாகம் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அவரை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில், எதிர்வரும் 9ஆம் திகதி நாளை மானிப்பாய் நவாலி தேவாலயத்திற்கு முன்பாக...
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்ட...
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். குறித்த புதிய பேருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த புதிய பஸ்...
வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த கைதியுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். தொற்றுக்கு உள்ளான குறித்த கைதி...
வடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது. இனிமேல் அந்தக்கட்சி ஒன்று...
விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே இந்த பகிரங்க சவாலினை விடுத்தார். செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப்புலிகளின் மேடையிலும் அவர்களுக்கு...
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்தவகையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிக்க முடியும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. முன்னர் காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில்...
ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர்...
திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது அதிகபட்சம் 300 பேர் எனும் இரு எண்ணிக்கைகளில் குறைவான எண்ணிக்கை எதுவோ, அவ்வெண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், திருமண...
Loading posts...
All posts loaded
No more posts
