Ad Widget

அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு: நள்ளிரவு முதல் பொருட்களின் விலை குறைகிறது!

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பருப்பு, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின்மீன்), பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமையநேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டின்மீன் (பெரியது) ஒன்று 200 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 100 ரூபாய்க்கும், சீனி ஒரு கிலோகிராம் 85 ரூபாய்கும் பருப்பு ஒரு கிலோகிராம் 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சதொச விற்பனை நிலையங்களில் தேங்காயை சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts