Ad Widget

பொது இடத்தில் முகக்கவசம் அணியாதோரை எதிர்க்க பொதுமக்களை ஊக்குவிக்கிறது சுகாதார அமைச்சு

பொது இடத்தில் முகக்கவசம் அணியாத எந்தவொரு நபருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க பொதுமக்களை ஊக்குவிக்கின்றது சுகாதார அமைச்சு.

பொது இடங்களில் புகைபிடிப்பதை தடைசெய்தபோது செய்ததைப் போலவே பொதுமக்கள் இந்த விடயத்திலும் அதிகாரம் செய்யும்படி சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், மருத்துவர் ஜெயருவன் பண்டார கேட்டுக்கொண்டார்.

பொது இடங்களில், குறிப்பாக பாடசாலைகளுக்கு அருகில் தனிநபர்கள் புகைபிடிக்கும்போது பெற்றோர்களும் மற்றவர்களும் அடிக்கடி ஆட்சேபனை தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யாராவது ஒருவர் பொது இடத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் பொதுமக்கள் கடும் ஆட்சேபனைகளை எழுப்பும் ஒரு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மருத்துவர் ஜெயருவன் பண்டாரா குறிப்பிட்டார்.

“சில இடங்களில் சமூக இடைவெளியை எங்களால் முழுமையாக செயல்படுத்த முடியாமல் போகலாம், ஆனால் யாராவது முகக்கவசம் அணியவில்லை எனில் நாங்கள் எதிர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

வைரஸ் பரவுவதைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் விரைவில் சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

Related Posts