- Wednesday
- April 29th, 2026
காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 10 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த சோகம் யாழ்ப்பாணம், இளவாலையில் நடந்துள்ளது. இளவாலை, உயரப்புலத்தைச் சேர்ந்த தனீஸ்வரன் அக் ஷ்யன் என்ற 10 மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளான். குழந்தைக்கு நேற்றுமுன்தினம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. முதலில் குழந்தைக்கு பரசிட்டமோல் வழங்கியுள்ளனர் பெற்றோர். ஆனால் காய்ச்சல் தொடர்ந்ததால் அவர்கள் நேற்றுக்காலை...
பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையம் (Online) ஊடாக நடத்துவதில் கவனம் செலுத்துவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கோரோனா வைரஸ் பரவல் நிலமை காரணமாப பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். இது குறித்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்...
கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.புங்குடுதீவு பெண் பயணித்த யாழ்.பருத்துறை இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. குறித்த நடத்துனருக்கு நடத்தப்பட்ட 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி தகவலை வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான அநாவசியமான பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார் அத்தோடு புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு...
நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 58 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் எனவும் ஏனைய மூவர் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொட கொரோனா...
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று(16.10.2020) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த...
முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் சிலாபத்துறை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. கொக்கிளாய் நோக்கி பயணித்த உழவு இயந்திரமொன்று, வீதி போக்குவரத்து கடமையிலிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் படுகாயமடைந்த குறித்த பொலிஸ்...
க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “க.பொ.த. உயர்தர பரீட்சைகள் அடுத்த மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எந்தவொரு தனியார் பேருந்துகளும் இயக்கப்பட மாட்டாது. பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது,...
யாழ்.மாநகர சபை உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணனை நீக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு தமிழ் காங்கிரஸ் கடிதம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயலாளருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய...
தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும்...
நாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள அலை அல்லது கொத்தனி மிகவும் கடுமையானது. நாளாந்தம் நுறு இருநூறு என நோயார்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால் 15, 20...
20வது திருத்த சட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் எதிராக வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் 20வது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.கே.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேரும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 36 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக உயர்வடைந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பில், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைவரும் அதற்கு...
இலங்கையில் உள்ள 12 கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் மொத்தம் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளன என்று கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் (NOCPC) தெரிவித்துள்ளது. மினுவங்கொடையில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1,544 படுக்கைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதேநேரம் மினிவங்கொட கொத்தணியில் கண்டறியப்பட்ட கொரோனா...
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக இலங்கை அரச நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, களுதாவளை பிரதேசத்தினை சேர்ந்த அவர், இலங்கை நிர்வாக சேவை சிறப்புத் தரத்தில் உள்ளவர். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் மூன்றாம் திகதி சித்த...
வேலைக்கு செல்வோர் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியானது சமூகத்தில் பல்வேறு இடங்களில் விஸ்தரித்துள்ளது. இருப்பினும் சென்ற முறைப் போன்று நாடளாவிய ரீதியில் முடக்கப்படாமல் குறிப்பிட்ட...
கட்டுநாயக்கா பொலிஸ் பிரிவில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் நிறுவன அனுமதி அட்டைகளை ஊரடங்கு அனுமதிகளாக பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts
