யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியினருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் அங்கஜன் எம்.பி

நேற்றைய தினம் (16) லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. அந்த தொடரில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதுவப்படுத்தும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் ஆபார வெற்றி பெற்றது.

அந்த அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுடன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் விளையாட்டு மைதானத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்ட வாழ்த்து செய்தியில்

இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவம் செய்து ஒர் அணியின் பெயர் சூட்டப்படுவது இதுவே முதன் முறையாகும். அதிலும், அந்த யாழ் அணியில் நம் வீரர்களும் களம் கண்டு சாதிக்க வேண்டும் என்ற நம் கனவு நனவாகி சர்வதேச தரத்தில் அவர்கள் நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கும் மேலாக, முதலாவது லங்கா பிரிமீயர் லீக் போட்டியிலேயே யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) சாம்பியனானது மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாத சாதனையாகும். யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணியினருக்கும், வீரர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மற்றம் இவ் விளையாட்டு தொடரினை ஒழுங்குபடுத்தி ஊக்கப்படுத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு எனது மனபூர்வமா நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

Congratulations to the Jaffna Stallions on a resounding victory. Significant moment as we have for the first time, a team representing Jaffna. Great exposure for the boys from Jaffna

Related Posts