- Tuesday
- April 28th, 2026
உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் எமது பிரதேசத்தில் காய்ச்சல் நோயுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள் இந்நிலையில் காய்ச்சல் எவ்வாறு வருகிறது என...
பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் பாடசாலைகளில் இன்று மூன்றாம் தவணைக் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று...
கொழும்புக்கான பயணத்தை அவசர தேவை கருதி மேற்கொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார். “தற்போதைய சூழலில் கொழும்புக்கான பயணத்தைத் தவிர்க்கவேண்டும். அவசர விடயத்தைத் தவிர ஒருவர் கொழும்புக்கு வரக்கூடாது” என்று அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கூடுதலான கோரோனா தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த...
மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகர் மீது கொண்ட சந்தேகம்தான் அவரைக் கொலை செய்வதற்கு காரணம் என்று சந்தேக நபர் தெரிவித்துள்ளார். அத்துடன், சந்தேக நபருக்கு எதிராக அவருடன் சம்பவ இடத்தில் நின்ற இளைஞன் அரச சாட்சியாக மாறியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். “எனது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தான் வளர்ப்பதற்குத் தருமாறு...
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் 'கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்' மற்றுமொரு கட்டம் 2020.11.08 (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யாழ். மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர்...
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (திங்கட்கிழமை) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர்...
வாடிக்கையாளர்கள் வைப்பிலிட்ட பணத்தை மோசடி செய்து கொண்டு இந்தியாவுக்குத் தப்பித்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் குடும்பத்தை படகில் ஏற்றிச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் காவல்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்குச் சென்று வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையினாிடம் நிதி நிறுவன உரிமையாளர் வழங்கிய வாக்குமூலம் கிடைத்ததும் படகு உரிமையாளர் கைது செய்யப்படுவார்...
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி இன்று தொடக்கம் காலை, மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார். மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பிரதேசங்கள் அடையாளப்படுப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் புகையிரத சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கும்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்...
மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலகரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “ஆடு மேய்ப்பவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பெண் கிராம அலுவலகர் ஒருவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்தது எனச் சந்தேகிக்கப்படும் குருதிக் கறை படிந்த சேட் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது....
வட்டுக்கோட்டை – சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ.8) மாலை 4 மணியளவில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர். சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய...
என்னைப்போல் வட பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட தலைமை காரியாலயத்தினை நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்...
நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 35ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 78 வயதான ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாகவும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தமை தெரியவந்ததாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவரது மரணத்துக்கான காரணம்...
மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, டேம் வீதி, முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ்,...
தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ் வருட தீபாவளியை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன்...
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் விவரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கரவெட்டியிலுள்ள...
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன்(வயது-55) என்பவருடைய கொலையை கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு...
மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி, தற்போது மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த திங்கட்கிழமைக்குள் நீக்கப்படும் என்று அவர் கூறினார். இந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட அனைவரையும் அடையாளம் காணுமாறும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார். கவனமாக இருந்தால்...
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்களுடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர்...
Loading posts...
All posts loaded
No more posts
