Ad Widget

மண்டைதீவில் கடற்படைக்கு காணி பறிக்கும் முயற்சி மக்களின் எதிர்பால் இடைநிறுத்தம்

மண்டைதீவில் கடற்படையினருக்கு 18 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்காக, நில அளவீடு செய்யும் முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

மண்டைதீவு கிழக்குப் பகுதியில் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் பளப்பளவு கொண்ட தனியார் காணியை ஆக்கிரமித்து கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்தக் கடற்படைத் தளத்துக்காக, 18 ஏக்கர் காணிகளையும் சுவீகரிப்பதற்கு முடிவு செய்துள்ள அரசு, அதற்காக அளவீட்டுப் பணிகளை நேற்றையதினம் மேற்கொள்ளவிருந்தது.

இதுதொடர்பாக காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காணி உரிமையாளர்கள், அந்தப் பகுதி மக்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், நில அளவீட்டுப் பணிக்காக வந்திருந்த அதிகாரிகள் தமது பணியை மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அத்துடன், வேலணை பிரதேச செயலாளரின் உறுதிமொழியை அடுத்து போராட்டமும் கைவிடப்பட்டது.

இதேவேளை, மண்கும்பான் வெள்ளைக்கடற்கரை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை 15 ஏக்கர் காணிகள் கடற்படை முகாமுக்காக அபகரிக்கும் முதற்கட்டப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே இன்றும் காலை 9 மணிக்கு அந்தப் பகுதியில் மக்கள் ஒன்றுகூடி போரோட்டம் நடத்தவுள்ளனர்.

Related Posts