- Friday
- February 6th, 2026
தையிட்டி விகாரை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை என்பதை உணராவிடில் பாரிய ஆபத்திற்கே இட்டுச் செல்லும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் திங்கட்கிழமை (10.02.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இராணுவ...
வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமலை வலியுறுத்தியதுடன், வடக்கில் புதிதாக தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த தென்னை பயிர்ச்...
மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான...
மின்சார விநியோக முறையை சரியாக சீரமைக்க மின்வெட்டை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்று திங்கட்கிழமையும் (10) நாளை செவ்வாய்க்கிழமையும் (11) பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் கட்டம் கட்டமாக ஒன்றரை மணித்தியாலம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார...
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து...
யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாகவிருந்த இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபா வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக...
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடு்க்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல்,...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆ ம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது....
நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (9) முற்பகல் 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். திடீர் மின் தடையால் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகமும் தடைபட்டதோடு, வீதி சமிஞ்ஞைகளும் செயலிழந்தன. கொழும்பிலுள்ள தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த மின் விநியோகத் தடை...
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் இதுவரை 56 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு ரஸ்ய தூதரக தகவல்களை அடிப்படையாக கொண்டு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை பணியகம் போன்றவற்றிற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி உக்ரைனிற்கு...
யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் , அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ் . மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த டிசம்பர் மாதம் 13ஆம்...
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து...
யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் இந்த மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை. யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர் தான் சண்டித்தனம் செய்து என்னை ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கலாம் 44 ஆயிரம் போராளிகள் உயிர் கொடுத்த எங்களின் தேசியத்தலைவரின்...
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன,...
யாழ்.மத்திய பேருந்து நிலைய வழாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றை இன்றையதினம் (06) முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகள் இந்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் தமது குடும்ப வருமானம்...
அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின்...
35000 பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 30000 அல்லது 35000 என்று கூறமுடியாது என்றும் வழமை போன்று அங்கு பட்டதாரிகள் குழுவிருப்பதால் ஒரு...
இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் மீது கொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது திருட்டு மௌனம் காத்திருந்த ஆட்சியாளர்கள் தற்போது லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...
யாழ் போதனா வைத்தியசாலையின் புதிதாக திறக்கப்பட்ட மகப்பேற்று விடுதிக்கு 14 புதிய நவீன கட்டில்கள் சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது. சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வைத்தியசாலைக்கு சென்று, மேற்படி கட்டில்களை 18 ஆம் இலக்க மகப்பேற்று விடுதியில் வைபவரீதியாக கையளித்தார். போதனா வைத்தியசாலைக்கு மேலும் புதிய கட்டில்கள்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கையை முன் வைத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதன்கிழமை (5) விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார். அதன் போது பணிப்பாளர், வைத்தியசாலையின்...
Loading posts...
All posts loaded
No more posts
