இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நாடு பூராகவும் உள்ள 48 மதிப்பீட்டு நிலையங்களில் இன்று ஆரம்பமாகின்றன.

இப்பணிகள் 380 மதிப்பீட்டுச் சபைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இவற்றில், சிங்கள மொழிமூல பரீட்சையின் முதலாவது மற்றும் இரண்டாவது விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக 142 சபைகளும், தமிழ் மொழிமூல விடைத்தாள்களுக்காக தலா 48 சபைகளும் ஒதுக்கப்பட்டிள்ளன.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பேறுகள் செப்டம்பர் 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.