- Sunday
- April 26th, 2026
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று (வியாழக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை கொட்டலவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், வருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் அடையாளம் காண தொடங்கியதால், நேற்று மாலை...
இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டு, இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. நாட்டில் கடந்த 2020 ஜனவரி 27 ஆம் திகதி சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இலங்கையில் பதிவான முதல் கொரோனா தொற்று சம்பவம் இதுவாகும். சீனப் பெண்ணைத் தொடர்ந்து 2020 மார்ச்...
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஷ்வர ஆலயத்தின் தலைவர், நிர்வாகி மற்றும் பூசகர் ஆகியோர் தொல்லியல் சின்னங்களுக்கு சிதைவை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கபட்ட நிலையில் இன்று முன்னைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆலயத்துக்குச் செல்லும் ஏணியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்துக்கு சந்தேக நபர்கள் சார்பில்...
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உள்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது....
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில் இராஜகிரிய ஊடாக களனி புதிய பாலம் வரை கொங்கிரிட் தூண்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போது...
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா பணிப்பிற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி...
சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் குப்பிகளை இலங்கை பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் சீனா 3 இலட்சம் குப்பிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 இலட்சம்...
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பபாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும்...
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (25) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடைகளின் உரிமையாளர், வழமைபோன்று நேற்றைய தினம் (25)...
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3 பொலிஸார் உள்பட 15 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகளும்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதி 3இல் சிகிச்சை பெற்றவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த விடுதியின் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வருகை தந்த நோயாளி ஒருவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அத்துடன், 9ஆவது நோயாளர் விடுதியிலும்...
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துளளார். குறித்த நடவடிக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 28 ஆம் திகதி போயா விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள...
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊடக மன்றத்தில் நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், அன்றைய தினம் எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து...
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 3 இலட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில்...
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வரும் வைரஸ் இனத்தைச் சேர்ந்த B.1.258 என்ற புது வகை வைரஸை ஒத்த வைரஸே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின்...
முதன்மைக் குழுவாக அடையாளம் காணப்பட்ட 3 லட்சம் நபர்கள் மூன்று வார காலத்திற்குள் இரண்டு அளவு கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் -19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே இதனைத் தெரிவித்தார்....
எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், அதனை மூடுவதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்காதுள்ளதாக யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்த தந்தையொருவர் கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு தனது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பான நஷ்டஈடும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி புதிய சட்டத்தை தயாரிப்பதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்நிலையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம்...
பாடசாலைகள் தொடங்கப்படுவதன் மூலம் மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து க.பொ.த. சாதாரணதர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது. அதன்படி,பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று தற்காலிகக் கல்வியைப் பெறுவதற்கான வசதிகள் உள்ளன என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. “தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு,...
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால், தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை. ஏன் எனில் எங்ளுடைய மொழி புறக்கணிக்கப்படும் இடத்தில் நான் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை எனவும் தெரிவித்தார். குறித்த...
Loading posts...
All posts loaded
No more posts
