- Monday
- April 27th, 2026
இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் உயிரோடு விளையாடாதே உலகமே எதிர்த்து நிற்கும் இனி உன்னை’, ‘விவசாய...
ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்புக்கள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கடந்த...
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை ஒன்லைன் அல்லது தொலைபேசி பயன்பாட்டு அடிப்படையிலான எளிதான கடன் திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஈர்ப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து...
வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள்...
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை செலுத்துவது மிகச் சிறந்தது என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர். உலக...
கொவிட் நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகுமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது உலகில் கொவிட் வைரஸ் பரம்பலில், மூன்று வகையான விகாரமடைந்த கொவிட் வைரஸ்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. வேகம் குறைவாகக் காணப்பட்டாலும் புதிதாக மாற்றமடையும் அவ்வாறு உருமாறிய...
கிளிநொச்சி 3 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் பயிலும் மாத்தளையைச் சேர்ந்த மாணவி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 11.15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸானது, பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப் போக்குவரத்து சபை பயணிகளை இறக்கிவிட்டு பஸ் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது யாழ்...
யாழ்ப்பாணம் நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. நிலாவரைக் கிணறு பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அதிகாரிகளிடம்...
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் அவரது அலுவலகத்தில்நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்று...
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன. அதன்படி இன்றைய தினம் சுமார் 15 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 768 பேரும் சவுதி அரேபியா மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் அதில் உள்ளடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 8ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்....
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள் பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. “பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று அதிகாலை படகில் சென்றேன். அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது...
தமது நாட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான ஒங்குமுறை அனுமதிகளை இலங்கை உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதற்காக அண்டை நாடுகளில் இருந்து பல கோரிக்கைகளை பெற்றுள்ளதாக இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இக் கோரிக்கையைத் தொடர்ந்து, பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர்...
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....
மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இரண்டாவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார். மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 57 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருதய நோயாளியான அவர்...
10 அத்தியாவசியப் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விலை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நடைமுறையிலிருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு விலையின் பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கென விநியோகஸ்தர்களுக்கான விலைமனு கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts
