- Sunday
- April 26th, 2026
இலங்கையின் 73ஆவது சுதந்திர நாள் நேற்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கு – கிழக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள், இலங்கை சுதந்திரமடைந்ததை நினைவு கூரும் வகையில் நேற்று காலை 8.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேசியக்கொடியேற்றல், மற்றும் இராணுவ அணிவகுப்புகள் என்பன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...
சமய, காலாசார மொழி அடையாளங்களை அழிக்கும் நோக்கில் அரச திணைக்களங்கள் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் அத்துமீறிச் செயற்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வடக்கு நோக்கி வருந்துகொண்டிருக்கின்ற நிலையில் இதற்கு அனைத்துத்...
தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்நியலையில், இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) கலந்துகொண்டு ஊடகங்களுக்குக்...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் இன்று புதன்கிழமை தாக்கல் செய்த விண்ணப்பங்களுக்கே இந்த தடை உத்தரவு...
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கான கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் நான்காம் நாளில் 704 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று வரையான கடந்த நான்கு நாட்களில் வடக்கில் ஏழாயிரத்து 925 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் எதிர்ப்பினையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமானது. தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில், பேரணி பொத்துவிலில் இன்று தொடங்கி எதிர்வரும்...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவினை அண்மையில் வழங்கியிருந்தது. சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர்...
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி இராணுவமே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக செட்டிக்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா செட்டிக்குளம் பேராறு காட்டுப் பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றிருந்தனர். குறித்த இளைஞன் உட்பட...
மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தொடங்கி உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ள இந்த ஜனநாயகப் படுகொலையை இலங்கை மக்கள் தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்....
வடக்கு – கிழக்கில் தற்கொலைகளை தடுத்து நிறுத்த அனைவரும் அபயம் நிறுவனத்துடன் இணைந்து சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறு இந்து சமயத் தலைவர்கள் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தோண்டுநாத சுவாமிகள் மற்றும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணப் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாத...
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் (AstraZeneca Covishield) அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கட்டத்தில்...
இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் தொட்டு இன்றுவரை தமிழ்த் தேசிய இனத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் செயற்படுகின்ற போக்கைக் கண்டித்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தோடு விளையாடும் போக்கைக் கண்டித்தும் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் போக்கைக் கண்டித்தும் இலங்கையின் சுதந்திர தினத்தைப் புறக்கணிக்க அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய இனத்திற்கும் பெருந்தோட்ட பாட்டாளிகளுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஜனநாயக முற்போக்கு...
அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7 லட்சம் ரூபாய் 20 பேர்ச் காணித் துண்டை வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணியில்லை என்பது அடையாளம்...
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுண்நிதிக் கடனில் சிக்கியுள்ள மக்களுக்கு இலகு கடன் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்வேறு நுண்நிதிக் கடன் முறைகள் மூலம் கடன்களைப் பெற்றுச் சிக்கியுள்ள குறைந்த வருமானமுடைய கிராமிய மக்களை குறித்த கடன்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம் ஊடாக...
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய கயான் தந்தநாராயண எனும் குறித்த வைத்தியர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால்...
தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது. இதன்போது, சிறிதரன் எம்.பி கருத்து தெரிவித்த போது,...
விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டம் நேற்று (01) ஆரம்பமானது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது....
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் ஒன்று நடைபெற்றது. “எமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு ஏதுவான வகையிலும் எங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள மரவுரிமைச் சின்னங்களை நாமே பாதுகாக்கும் நோக்குடனும் அவ்...
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளம நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த...
Loading posts...
All posts loaded
No more posts
