யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 660 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 12 பேருக்கு...

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”சமகால...
Ad Widget

நாடு முழுமையாக முடக்கப்படுமா? – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற்கொண்டு அரசாங்கம் என்ற ரீதியில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறினார். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதே தற்போது...

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!

இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 95 ஆயிரத்து 83 பேர்...

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் மாகாணத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்கள் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொலிஸார், சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 12 இடங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் உடகப் பேச்சாளர்...

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல்...

நாட்டை உடனடியாக முடக்க வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை தவிர வேறு எந்ததொரு மாற்று வழியும் இல்லையென அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். குறித்த செயற்பாட்டினை விரைவாக முன்னெடுக்காவிடின் எதிர்வரும் காலத்தில் நாடு பெரும் ஆபத்தில்...

பெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தங்களது குழந்தைகளை, வீட்டிலேயே வைத்திருக்குமாறு பெற்றோருக்கு குடும்ப சுகாதார பணியகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி...

சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

சுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நேற்றைய அறிக்கையின்படி கொரோனா பரவல் வடக்கில் கட்டுப்பாட்டிற்குள்...

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும், யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தார்கள் என குற்றஞ் சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள்...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு – ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிப்பிட்டிய, அம்பகஹபலஸ்ஸ, வத்தள மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், 62, 45, 53, 56, 76, 48 மற்றும் 57 வயதுடைய ஆண்களும்...

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

கொரோனா தொற்று பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, மேல் மாகாணம், வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பிரதான சந்திகளில், தீவிர கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிக்காக கொக்குவில் சந்தியில், தகர கொட்டகை முகாம் ஒன்றினையும் அமைத்துள்ள இராணுவத்தினர் முகக்கவசத்தை உரியமுறையில் அணியாதவர்களை எச்சரித்து, உரிய முறையில் அணியுமாறும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்குமாறும் மக்களை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல்...

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?- முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, யாழில் நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா வைரஸ்...

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் ஒன்றும் காணப்படுகிறது!!

நாட்டினுள் தற்போது வைரஸ் காய்ச்சல் நிலமை ஒன்று காணப்படுவதாக விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை போன்று இந்த வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட்டுவாகலில் வெடிபொருள் வெடித்ததில் இளைஞன் சாவு!!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்கு முன்பாக வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.40 மணியளிவில் இடம்பெற்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் திஷாந்த் (வயது-19) என்ற இளைஞன் சம்பவ...

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன குணசேன மேலும்...

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் மூன்று உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அவிசாவளை, கந்தான மற்றும் கல்பாத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 92 வயதுடைய ஆணொருவரும் 70 வயதுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 647ஆக அதிகரித்துள்ளது....

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு நேற்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். சாவகச்சேரியில் நால்வருக்கும், பருத்தித்துறையில் 2 பேருக்கும் தெல்லிப்பழையில் இருவருக்கும் சண்டிலிப்பாயில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கு கொரோனா...

கொரோனா பரவல்: நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பாக இராணுவத் தளபதியின் அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாமெனவும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார். அத்துடன்,...
Loading posts...

All posts loaded

No more posts