- Sunday
- April 12th, 2026
இலங்கையில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து, மக்கள் போராட்டங்களை அடுத்து அதி விசேட வர்தமானிமூலம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் 05.04.22 நள்ளிரவு முதல் மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரசுரித்துள்ளார்.
நேற்று நிதி அமைச்சராக நியமனம் பெற்ற அலி சப்ரி இன்று பதவியை இராஜிநாமா செய்தார். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே காரணம் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் பல அருட்தந்தைகளும், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளும் இணைந்து மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இன்று...
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக...
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கை கோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறரை மணிநேர மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி A முதல் L வரையான வலயங்களில் முற்பகல் 8 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையில் சுழற்சி...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை...
வடக்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி யாழ். நகரில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் ஏழு நாட்களுக்குள் அநுராதபுரம் கடந்து தெற்கு வரை செல்லவுள்ளது. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் மிரிஹான பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போராட்டம் என்பவற்றின் எதிரொலியாக...
தற்போதைய பிரச்சினைக்கு எந்த அரசிடமும் எந்த தலைவரிடமும் உடனடி தீர்வு இல்லை. தற்போதுள்ள சிக்கலுக்குள் தீர்வு பெற வேண்டுமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வன்முறை இல்லாமல் போராட்டங்களை மேற்கொண்டே தீர்வை பெறலாம் எனவும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின்...
இலங்கையில் இன்றும் பல இடங்களிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் , சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று காணப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்ற மரவேலை செய்பவா்கள் மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளனது. அத்துடன் புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும்...
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2350 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடமொன்றை இவ்வருடம் திறக்க அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன...
06 பொலிஸ் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது. அந்த பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்கள் தற்போது வழமை போன்று தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு,...
யாழ். கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்று (வியாழக்கிழமை) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய்...
இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்துள்ளார். மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,...
தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிந்திக்கிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும்...
நுகேகொட – மிரிஹான பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2...
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்துப் பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அஸ்கிரிய பீடாதிபதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Loading posts...
All posts loaded
No more posts
